முன்னாள் குடியரசுத்தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனியார் தொ.கா ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்..
இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அப்போது அவரிடம், 'தோரியம் அணு உலை'முக்கியத்துவத்தை விளக்கினேன்.இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.
பார்லிமென்ட் நடக்கும்போது கட்சிகளுக்குள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனால், சபை நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது. சபை தொடர்ந்து நடக்க வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது, அதை ஏராளமான மக்கள் கவனிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கவனிக்கின்றனர். உறுப்பினர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை திருப்பி அனுப்பியதால் தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு எனக்கு பறிபோனதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு பெரிய விஷயம் அல்ல.
மக்களுக்காகவே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவது குறித்து ஆலோசித்தேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இது பற்றி சர்ச்சை எழுந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்காக கவலைப்படவில்லை. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய இருவருமே பல்வேறு விஷயங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள்.
தினமலர்
No comments:
Post a Comment