.

Thursday, March 29, 2007

திருமண மண்டபத்தை இடிக்க 5 மாத அவகாசம் வேணும்:விஜயகாந்த் மனைவி

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் நிர்வாக இயக்குனரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்க எங்களுக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை மத்திய அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மண்டபத்தை காலி செய்து மார்ச் 26-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் கெடு விதித்தது. இந்த கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கு எங்கள் மண்டத்தில் பலர் பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் வரை கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் பிரேமலதா கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இதில் மத்திய அரசு சார்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜராகிறார்.

- மாலை முரசு

கட்டாய தமிழ் சுமையாக இருக்காது

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் தமிழை கட்டாயமாக சொல்லி தரவேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜரானார். ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாய தமிழ் கொண்டு வருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. கர்நாடகாவில் 3ம் வகுப்பில் இருந்தும், மகாராஷ்டிராவில் 5ம் வகுப்பில் இருந்தும் தாய்மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது சரியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

- மாலை முரசு

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது


சினிமா மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ வழங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் விருதுடன் நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா.

இராமநாதபுரத்தில் 8 ராடர்கள்:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா அமைத்தது.

கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் முதலாவதாக நடத்திய விமானத் தாக்குதலையடுத்து வான் பரப்பை கண்காணிப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 8 ராடர்களை இந்திய விமானப் படையினர் பொருத்தியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: www.thinakural.com

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

பள்ளிப் பேருந்து மனிலாவில் பிணை - சுபம்

மணிலாவில் 33 சிறார்களையும் இரு ஆசிரியர்களையும் பிணையாக வைத்திருந்த சம்பவம், எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்தது. ஏழை மாணவர்களுக்கு கல்வி கோரி, இதை அரங்கேற்றியதாக 56 வயது யூன் (Jun Ducat) தெரிவித்தார்.

The Standard - China's Business Newspaper: "A man who took a busload of children and teachers hostage from his day-care center in Manila Wednesday freed them after a 10-hour standoff during which he denounced corruption and demanded better lives for poor children."

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை

வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.

முழு ஸ்கோர்கார்ட்

சற்றுமுன்: 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி கிடைக்கிறது!

thatstamil தரும் செய்தி.

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

தென்னிந்திய திரையலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான படம் தயாரிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மெகா பட்ஜெட் படம் சிவாஜி. இப்படிப்பட்ட படம் இப்போது வெறும் 50 ரூபாய்க்கு தெருவில் வைத்து விற்கப்படுகிறது. சென்னையின் புறநகரான நங்கநல்லூரில், ஒரு டிவிடி கடைக்கு எதேச்சையாக போக நேர்ந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு டிவிடியைக் காட்டினார். என்ன படம், என்ன விவரம் என்று எதுவும் அந்த டிவிடியில் இல்லை. ஆனால் கடைக்காரர், நமது காதை அருகில் இழுத்து கிசுகிசுத்தார். சிவாஜி பட டிவிடி சார் இது. படத்தின் 40 நிமிடக் காட்சிகள் இதில் உள்ளது. 50 ரூபாய்தான், வேணுமா என்று அவர் கூறக் கூற நமக்கு தலை சுற்றிப் போனது. நிஜமாவா என்று நாம் ஆச்சரியம் காட்டியபோது, மெய்யாலும்தான் சார், குவாலிட்டியைப் பற்றிக் கவலைப்படாதீங்க, டிஜிட்டல் பிரிண்ட் இது. படு சூப்பராக இருக்கும், தியேட்டரில் பார்ப்பது போலவே எஃபக்டிவாக இருக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தார்.

ஷாக்கிலிருந்து மீளாத நிலையில், நாம் உடனே படத்தின் பி.ஆர்.ஓ. பெரு துளசிபழனிவேலைப் போனில் பிடித்து விசாரித்தோம். மேட்டர் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது, அப்படியா சார், எனக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்க சார் என்றார் படு கூலாக!. தொடர்ந்து அவரே, தினசரி சிவாஜி குறித்து ஒரு செய்தி வருகிறது. ஒவ்வொரு செய்திக்கும், வதந்திக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுடைய வேலைதான் கெட்டுப் போகும். ஏவி.எம். சரவணன் சார் சொல்வதுதான் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல். இதற்கு அவரே பதில் சொல்லட்டும் என்றார்.

முதலில் பட ஸ்டில்கள் லீக் ஆனது, பின்னர் படமே லீக் ஆனதாக செய்தி வந்தது. சமீபத்தில் 3 பாடல்களை இணையதளத்தில் உலவ விட்டனர். இப்போது 40 நிமிட படக் காட்சிகளை வெளியில் விட்டுள்ளனர். அடப் பாவிகளா..

சற்றுமுன்: நந்திகிராம் திட்டத்தைக் கைவிட்டார் புத்ததேவ்

கடந்த மார்ச் 14-ம் தேதியன்று நடந்த கலவரத்தின் எதிரொலியாக நந்திகிராமத்தில் ரசாயன உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டார் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அத்துடன், வன்முறைச் சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.




"Yahoo-Tamil"

சற்றுமுன்: ஏப்ரல் 2ம்தேதி சிவாஜி ஆடியோ வெளியீடு

சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் மற்றும் சிடி ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்படுகிறது.
"ஏப்ரல் 4ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, 2ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசட் ரூ. 45க்கும், சிடி ரூ.100 க்கும் கிடைக்கும். ஆரம்ப கால சலுகையாக ரசிகர்களுக்கு சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரஜினியின் 3டி ஸ்டிக்கர் இலவசமாக வழங்கப்படும் என ஏ.வி.எம்., நிறுவனம் தெரிவித்துள்ளது.


Courtesy: தினமலர்

ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் கண்டனம்

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து "ராமர் பாலத்தை காப்போம்' என்ற இயக்கத்தை ராமநவமி தினத்தன்று தொடங்கியுள்ளன. சுனாமிக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டாவது சுற்றுக்கு ஆய்வுக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்று இந்த இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன்

பா.ஜனதா மாநிலத் தலை வர் இல.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவாரூரில் ஆழித் தேர் பாரம்பரிய முறைப்படி நாளை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் கூட கோரிக்கைகளை புறக்கனித்து ஆலய மற்றும் அரசு நிர்வாகம் தன்னிச்சையாக வேறு தேதியில் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாளைய தினம் பரிச்சார்த்தமாக மாதிரி தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக் கையில் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட் டுள்ளார்.

திருவாரூரையே சேர்ந்த கருணாநிதி இதில் தலையிட்டு அடுத்த ஆண்டு மரபுப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் தர வேண்டுகிறேன். குறைந்த பட் சம் அமைச்சர் மூலமாவது, அதிகாரிகள் மூலமாவது இந்த உத்திரவாதத்தை அரசு தரவேண்டும். இல்லையேல் நாளை திட்டமிட்டபடி தேரோட்ட போராட்டம் நடை பெறும்.


மாலை மலர்

சற்றுமுன்: தசாவதாரம் எனது கற்பனையில் உருவானது - நடிகர் கமலஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடித் து வரும் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாம்பர த்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், தசாவதாரம் படத்தை திரையிட தடை விதித்தது. மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் கமல்ஹாசன், படத்தின் இயக்குனரும், ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பியது.

இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்ய்ராமசாமி, ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

நான் புதிய கதையை உருவாக்கி, தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறேன். இதை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். மனுதாரரை நான் பார்த்தது இல்லை. 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில படங்கள், தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த நிலையில் 10 வேடங்கள் உள்ள கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு உள்ளது. எனது கற்பனையில் உருவானது தான் தசாவதாரம் கதை. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய மனுதாரர் மீது உரிய நேரத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன். போலீசில் என் மீது மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து என்னிடம் போலீசார் விளக்கம் கேட்டனர். நான் உண்மையான பதில் கூறியுள்ளேன். இதை போலீசாரும் ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பதில் மனுவில் கூறியுள்ளார்.

- மாலை முரசு

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: சிறுவாணி அணை நீர்மட்டம்் குறைந்துவருகிறது




கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவெனக் குறைந்துவருகிறது. 70 நாட்கள் தேவையைச் சமாளிக்க இந்த நீர் போதுமானது.

- மாலை முரசு

சற்றுமுன்: ஈரோடு மாவட்டத்தில் நாளை பந்த்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு 160 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி., தண்ணீரையும், அமராவதி ஆற்றிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரையும் கேரளாவுக்கு வழங்க கோரி உத்தரவிட்டுள் ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தில் விவசாயமும், விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்க ளின் வாழ்வும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடுவர் மன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் 29ம் தேதி ரோடு மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந் தது. இதை ஏற்று அனைத்து சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆதரவளித்துள்ளதால் பொதுவேலை நிறுத் தம் முழுமையாக வெற்றியடையும் என இச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

- மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...