நடிகர் கமல்ஹாசன் நடித் து வரும் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாம்பர த்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், தசாவதாரம் படத்தை திரையிட தடை விதித்தது. மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் கமல்ஹாசன், படத்தின் இயக்குனரும், ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பியது.
இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்ய்ராமசாமி, ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
நான் புதிய கதையை உருவாக்கி, தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறேன். இதை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். மனுதாரரை நான் பார்த்தது இல்லை. 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில படங்கள், தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த நிலையில் 10 வேடங்கள் உள்ள கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு உள்ளது. எனது கற்பனையில் உருவானது தான் தசாவதாரம் கதை. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.
எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய மனுதாரர் மீது உரிய நேரத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன். போலீசில் என் மீது மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து என்னிடம் போலீசார் விளக்கம் கேட்டனர். நான் உண்மையான பதில் கூறியுள்ளேன். இதை போலீசாரும் ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பதில் மனுவில் கூறியுள்ளார்.
- மாலை முரசு
Thursday, March 29, 2007
சற்றுமுன்: தசாவதாரம் எனது கற்பனையில் உருவானது - நடிகர் கமலஹாசன்
Posted by சிவபாலன் at 12:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் போல.
தொடர்பான செய்தி நறுக்குகள்... Kamal « Tamil News
Post a Comment