.

Tuesday, March 13, 2007

துபாயில் சம்பள உயர்வு கேட்ட 250 பேர் சிறையில் அடைப்பு

துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டதற்காக 250 தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனிமேல் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக எந்தவித சம்பள உயர்வும் இல்லாமல் பணிபுரிந்த தமிழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வரும், இந்திய அரசும் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

- மாலைமுரசு

2 comments:

Anonymous said...

இது முற்றிலுமான செய்தி இல்லை.

அனைவரும் தமிழர்களா என தெரியாது, ஆனால், அவர்கள் சம்பள உயர்வு கேட்டதால் மட்டும் சிறையில் அடைக்கப்பட வில்லை. போராட்டம் நடத்திய போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததால் தான் இந்த நடவடிக்கை.

இம்மாதிரி இந்தியாவில் நடக்காது, இங்கேயாவது நடக்கட்டுமே?

bala said...

//இந்த விஷயத்தில் தமிழக முதல்வரும், இந்திய அரசும் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்//

ரம்ஜான் கஞ்சி,மஞ்ச துண்டு அய்யா,இதைச் செய்ய மாட்டார்.

பாலா

-o❢o-

b r e a k i n g   n e w s...