வீரர்கள் 'ரெடி'; ஸ்டேடியம் 'நாட் ரெடி'
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மைதானங்களில் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து மைதானங்கள் மேம்பாட்டு இயக்குநர் டான் லாக்கர்பீ செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
அனைத்து மைதானங்களும் இன்னும் முழுமையாகாமல் இருப்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.
- கென்சிங்டன் ஓவல்,
- கிரெனடா,
- ஆன்டிகுவா,
- கயானா
ஆகிய இடங்களில் உள்ள மைதானங்கள் விரைவில் தயார் செய்யப்படும் என்றார் அவர்.
லீக் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ள செயின்ட் கிட்ஸ், குயின்ஸ் பார்க் ஓவல், செயின்ட் லூசியா ஆகிய மைதானங்கள் புத்தாக்கம் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
சூப்பர்-8 போட்டிகள் நடைபெறவுள்ள ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், கயனா தேசிய ஸ்டேடியம் ஆகியவைகளும் தயாராக உள்ளன.
1 comment:
கென்சிங்டன் ஓவல் மைதானம் போட்டிக்கு தயாரானால் அது மிகப்பெரிய ஆச்சர்யமே, இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தபோது - இரு மாதங்களுக்கு முன் இருந்ததைவிட மிகச் சிறு அளவிலான பணிகள் மட்டுமே நடந்திருந்தது.
Post a Comment