.

Thursday, March 15, 2007

நந்திக்ராம் கலவரம் - செய்தித் தொகுப்பு

மேற்கு வங்கத்தில், நந்திக்ரரம் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை விற்பது குறித்த சர்ச்சையில் எழுந்த போராட்டங்களை அடக்க நேற்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14கிராம மக்கள் உயிரிழந்தனர்.

வியாழன் காலையில் நந்திக்ராமிலலுள்ள BDO அலுவலகத்தை கும்பலாய் பொதுமக்கல் தாக்கியதாகவும், தீ வைத்ததாகவும் அதன்பின் தொடர்ந்த நிகழ்வுகளில் கலவரம் துவங்கியதாகவும் தெரிகிறது. இறந்த 14பேரில் 10பேர் போலிஸ் துப்பாக்கிச்சூட்டிலும் 4பேர் கல்லடி பட்டு அல்லது குண்டு வெடித்ததில் இறந்திருப்பதாகவும் தெரிகிறது.

பெரிதும் அரசியலாக்கப்பட்ட விதயமாக நந்திக்ராம் நிலப் பிரச்சனை வளர்ந்துவிட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பின்னரும் எதிர்க் கட்சிகள் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆளும் கட்சி மக்களைத் தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் மீதும் குற்றம் சுமத்தியபடியுள்ளன.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட காந்திக்ராம் வெறிச்சோடிக் கிடக்கிறது என செய்திகள் சொல்கின்றன. போலீசைத் தவிர அங்கு குறைந்த பட்ச ஆட்களே இருக்கின்றனர். உறவினர்களைத் தேடிக்கொண்டும், ஆங்காங்கே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டும் மக்கள் அவதிப் படுகின்றனர்.

5000ம் கிராம மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாமலேயே துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டிய கட்டாயம் வந்தாதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் புத்ததெவ் பட்டச்சர்ஜீ இன்று (15/03/2007) பிரதமரிடம் கலவரம் பற்றி விளக்கியுள்ளார் மேலும் மாநில அரசின் ரிப்பொர்ட்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர் "(தொழிற்சாலை அமைக்கு வேலைகளிலிருந்து) பின்வாங்குவது எனும் கேள்விக்கே இடமில்லை" என்றிருக்கிறார். (The Hindu)

இதற்கிடையே கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் ஆணையின்படி சி.பி.ஐ மூவரடங்கிய குழு ஒன்றை நந்திக்ராம் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

கலவரப் பகுதிக்குச் சென்ற பத்திர்கையாளை திரினாமுள் காங்கிரஸ் மற்றும் CPI(M) கட்சிக்காரர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தி தவறானத் தகவல்களைத் தருகிறீர்கள் என எச்சரித்ததாகவும் தெரிகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...