.

Thursday, March 15, 2007

தெரு நாய்களை கொல்லக் கூடாது - நடிகை அமலாஇந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் ஆர்.கே.ஹெர்ப் தலைமையில், சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. வாரிய துணைத்தலைவர் வி.என்.அபாஜிராவ், உறுப்பினர்கள் நடிகை அமலா, எஸ்.கே.மிட்டல், டாக்டர் முகமது அஸ்லாம், சோனி, புளுகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விலங்குகள் நல ஆர்வலரும் நடிகையுமான அமலா பேசுகையில், ‘‘நாய்கள் மூலம் ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க, அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும். மனிதத் தன்மை அற்ற முறையில், தெரு நாய்களை கொல்லக்கூடாது’’ என்றார்.

வாரிய தலைவர் ஆர்.கே.ஹெர்ப் கூறுகையில், ‘ரேபிஸ் அற்ற இந்தியாவை உருவாக்க, ஒரு முன்னோடி திட்டத்தை டெல்லி, கோரெகான், பெங்களூர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாய்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கிறோம். நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.

15 comments:

சிவபாலன் said...

You may find an interview by Actress Amala about Blue cross, Hyderabad.

http://www.totaltollywood.com/
interviews/interviews.php?category=3&id=amala

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

என் ஆளு, இதயக்கனி, ஆருயிர்த் தலைவிங்கறதுக்காகச் சொல்லலை. நிஜமாவே தெருவில் திரியும் நாய் பன்றிகளைக் கொடூரமாகக் கொல்வது எனக்கு உடன்பாடற்ற விஷயம். வருமுன் காப்போம் என்ற ரீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். தும்பை விட்டுவிட்டு (நாய்) வாலைப் பிடிக்கிறார்கள்.

இப்படி சீரியஸான மேட்டருக்கு எங்காளு படத்தைப் போட்டு யோசிக்கவிடாம பண்ற உங்கள் நரித்தனத்தைக் கண்டிக்கிறேன். இருந்தாலும் அம்முவின் படத்தைப் போட்டதற்காக உங்களுக்கு ஒரு "ஓ"!

(எங்கேப்பா கர்சீப்?. ஜொள்ளைத் துடைக்க வேண்டியிருக்கு)

சிவபாலன் said...

"வற்றாயிருப்பு" சுந்தர்,

அம்மு உங்களுக்கு மட்டுமா இதயக்கனி..Ha Ha Ha...தெரு நாய்களை கட்டுப்படுத்த சரியான ஒரு அனுகுமுறை தேவை..

இந்த சுட்டியை பாருங்க.. தெருநாய்களைக் கொல்வதால் வணிகம் பாதிக்கும் - http://satrumun.blogspot.com/
2007/03/blog-post_2269.html

Nakkiran said...

சிவபாலன்
//Animal Lovers Association, up in arms against the Karnataka Government's 'move to kill stray dogs', has warned that the "extreme act of cruelty" may lead to boycott of coffee produced in the State by importers in the European Union. //

இதை விட ஒரு முட்டாள்தனமான ஒரு மிரட்டல் இருக்க முடியாது. அவனவன், மத்திய கிழக்கு நாடுகளில் மனிதர்களை இலட்சக்கணக்கில் நாயை விட கேவலமாக கொல்கிறான், அதை கேள்வி கேட்க நாதியற்ற கூட்டம் இங்கே மக்களுக்கு பாதிப்புண்டாக்கும் நாய்களை கொல்வதற்கு எதிர்ப்பு சொல்கிறது.

இப்படி எதிர்ப்பவர்களின் குழந்தை நிச்சயம் தெருவில் விளையாடப்போவதில்லை, அல்லது தெருவில் நடந்து போவதில்லை. காரில் செல்பவனுக்கு எப்படி தெரியும் 5 வயது குழந்தையின் நாய்க்கடி வலி.

நாய்க்கு குடும்பக்கட்டுப்பாடு, ரொம்ப முக்கியம். இங்கே செய்வதுற்கும், செலவழிப்பதற்கும் இதை விட பல முக்கிய விஷயங்கள் உள்ளன. நாய்க்கு குடும்பக்கட்டுப்பாடு இதெல்லாம் வேலைக்காவத வேலை...புடிச்சிப்போட்டுனு போயிட்டே இருக்கனும்.

சிவபாலன் said...

நக்கீரன்

நீங்க சொல்லற மாதிரிதான் இப்ப தூக்கி போட்டுவிட்டு போயிட்டே இருக்கிறார்கள்..

நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை.. முயன்றால் நிச்சயம் ஒரு நல்வழிபிறக்கும்.. அது போல் இந்த தெரு நாய்களுக்கும் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்..

ஒரு இரு நாய்கள் கடிப்பதால் மற்ற (அப்பாவி!?) நாய்களையும் கொண்டுசெல்லும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது..

நல்ல தீர்வு வந்தால் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

எப்படியோ பேப்பரில பேர் வர வைக்க இப்படியும் உத்தி இருக்கா?
நாயிகிட்ட கடிவாங்கிறது நாங்கதானே!

புள்ளிராஜா

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//அம்மு உங்களுக்கு மட்டுமா இதயக்கனி..Ha Ha Ha...
//

அந்த நாகார்ஜுன் கடங்காரனைப் பத்திச் சொல்றீங்களா? அந்தாளை அடுத்த ஜென்மத்துல பாத்துக்கறேன்.

//இப்படி எதிர்ப்பவர்களின் குழந்தை நிச்சயம் தெருவில் விளையாடப்போவதில்லை, அல்லது தெருவில் நடந்து போவதில்லை. காரில் செல்பவனுக்கு எப்படி தெரியும் 5 வயது குழந்தையின் நாய்க்கடி வலி.//

தவறான புரிதல் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஐயா, என்னையும் தண்டவாளத்தில் நடந்து போகும்போது ஒரு நாய் வந்து கவ்வியது. நானும் குட்டியூண்டிலிருந்து கண்திறவா அனாதைக் குட்டிகளை வளர்த்திருக்கிறேன். வெறிநாய்களைக் கொல்வதற்கும் கண்ணில் படும் நாய்களைக் கொல்வதற்கும் - அதிலும் கொடூரமான முறையில் கொல்வதற்கும் உண்மையிலேயே உங்களுக்கு வித்தியாசம் புலப்படவில்லையா?

கிராமங்களில் பன்றியொழிப்பை நடத்தும்போது பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. பெரிய பன்றியை நான்கு கால்களையும் சேர்த்துக்கட்டி காயடிப்பார்கள். சின்னக் குட்டிகளை (ஒரு மாதம் கூட நிரம்பியிருக்காது) அப்படியே கையில் எடுத்து ஓங்கிச் சிதறு தேங்காய் போடுவது மாதிரி தரையில் ஒரு போடு. 'ம்க்' என்று லேசாகச் சத்தம் கேட்கும்.

நாய்களுக்கு நீண்ட கழியின் நுனியில் கம்பியினாலான 'தூக்குக் கயிறு' ஒன்றை வைத்து கழுத்தில் மாட்டி ஒரே இழு. அதால் கத்தக் கூட முடியாது. துள்ளினால் கையிலிருக்கும் தடியால் கபாலத்தில் இரண்டு அடி. கதை முடிந்தது.

அது சரி. மனிதனின் பிணத்தையே காகம் தின்ன சைக்கிளில் தள்ளிச் செல்லும் அவலம் இருக்கின்ற சூழ்நிலையில் இம்மாதிரி வாயில்லா ஜீவன்களைப் பற்றியா கவலைப்பட முடியும்.

//மத்திய கிழக்கு நாடுகளில் மனிதர்களை இலட்சக்கணக்கில் நாயை விட கேவலமாக கொல்கிறான், அதை கேள்வி கேட்க நாதியற்ற கூட்டம் இங்கே மக்களுக்கு பாதிப்புண்டாக்கும் நாய்களை கொல்வதற்கு எதிர்ப்பு சொல்கிறது//

ஆஹா என்ன மாதிரியான லாஜிக்!. ஆக ஒரு கொடுமையைத் தட்டிக் கேட்காதவர்கள் இன்னொரு கொடுமையைத் தட்டிக் கேட்கக் கூடாது. அடுத்த நாட்டில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்டபின்புதான் நம் நாட்டில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கவேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்று நிச்சயமாக உங்களுக்குத் தெரியுமா?

காரில் செல்பவர்கள் மட்டுமல்ல ஐயா, கழைக்கூத்தாடியின் செல்ல நாயைப் பிடித்துச் சென்றாலும் அவனும் எதிர்த்துக் குரல் கொடுப்பான்.

மனமிருந்தால் எல்லாவற்றையும் முறைப்படுத்திச் செய்ய முடியும்.

Nakkiran said...

"வற்றாயிருப்பு" சுந்தர் அவர்களுக்கு,

//ஐயா, என்னையும் தண்டவாளத்தில் நடந்து போகும்போது ஒரு நாய் வந்து கவ்வியது//

இதற்கும், 5 வயது கூட நிரம்பாத பிஞ்சு 20 நாய்களால் குதறப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள் என அறிகிறேன்.

//வெறிநாய்களைக் கொல்வதற்கும் கண்ணில் படும் நாய்களைக் கொல்வதற்கும்//

ஆளை கடிக்க நாய்க்கு வெறி பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. நாலைந்து நாய்கள் இருக்கும் தெருவில் கொஞ்சம் ஓடி பாருங்கள் புரியும்...


//ஆஹா என்ன மாதிரியான லாஜிக்!. ஆக ஒரு கொடுமையைத் தட்டிக் கேட்காதவர்கள் இன்னொரு கொடுமையைத் தட்டிக் கேட்கக் கூடாது. அடுத்த நாட்டில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்டபின்புதான் நம் நாட்டில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கவேண்டும். //

முதலில் இந்த கருத்தை நான் உங்களை நோக்கி சொல்லவில்லை... "may lead to boycott of coffee produced in the State by importers in the European Union." என்று சொல்லியிருந்ததால் European Union எண்ணிதான் அதை கூறினேன்.

//இதை எதிர்ப்பவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்று நிச்சயமாக உங்களுக்குத் தெரியுமா?//

நிச்சயமாக தெரியும், வளைகுடா யுத்தத்தால் உலகின் எந்த நாடும் அமெரிக்காவுடனான எந்தவிதமான தொடர்பையும் அறுத்துக்கொள்ளவில்லை, இல்லை அப்படி அறுத்துக் கொள்வோம் என்றும் மிரட்டவில்லை...இந்தியா நாயைக் கொன்றால் கூட காபியை இறக்குமதி செய்யமாட்டார்களாம். அமெரிக்காவாக இருந்தால் மனிதனை கொன்றாலும் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் ஏக ஜோராக நடக்கும்... இதைத்தான் லூசுத்தனமான மிரட்டல் என்கிறேன்...

//காரில் செல்பவர்கள் மட்டுமல்ல ஐயா, கழைக்கூத்தாடியின் செல்ல நாயைப் பிடித்துச் சென்றாலும் அவனும் எதிர்த்துக் குரல் கொடுப்பான். //

உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, எல்லா நாய்களையும் பிடிக்கமாட்டார்கள். நீங்கள், நகராட்சி இல்லை ஊராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி டோக்கன் வாங்கி உங்கள் நாய் கழுத்தில் கட்டினால் அது தெருவில் திரிந்தாலும் அதை பிடிக்க மாட்டார்கள்.

மற்றபடி நாய்களை தொடவே கூடாது என்பது too much...

//மனமிருந்தால் எல்லாவற்றையும் முறைப்படுத்திச் செய்ய முடியும். //

எதையும் கொஞ்சம் பிராக்டிகலா பாருங்க.. அதுவும் நம்ம நாட்டு சூழ்நிலையில.. இதெல்லாம் வேலைக்காகுமா?... அரசாங்கம் முழுமனசா ஈடுபட்டு இருக்கும் போலியா சொட்டு மருந்தையே நம்மலால 100% கொடுக்கமுடியல. இதுல நாய்க்கு குடும்பக் கட்டுப்பாடு..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அமலா!எல்லா நாயையும் கூட்டிக் கொண்டு சென்று, அவர் வீட்டில் வைத்திருப்பது பற்றி எனக்கு அந்த ஆட்சேபனையும் இல்லை.
தலைவலி;காச்சல் தனக்கு வந்தால் தான் தெரியும்; அமலாவுக்கு நம்ம கஸ்டம் தெரியாது.
சிங்கப்பூரிலேயே காகம்;புறாவைச் சுட்டுத் தள்ளுறான். மனிதரை மனிதராக வைத்துக் கொண்டு.
நம் நாட்டில் மனிதரை மனிதராக வாழ வைக்கும் வழியைப் பார்ப்போம்.
இந்த திண்டது செமிக்க ;உடல் ஊழைச் சதை கரைய மிருக நலம் பேணுவோர்; அமெரிக்கா,ஐரோப்பாவில் குடியேறுவதே!!மேல்

சிவபாலன் said...

யோகன் பாரிஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிவபாலன் said...

"வற்றாயிருப்பு" சுந்தர், நக்கீரன்,

கருத்துக்கு நன்றி

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

நண்பர் நக்கீரன்,

//இதற்கும், 5 வயது கூட நிரம்பாத பிஞ்சு 20 நாய்களால் குதறப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள் என அறிகிறேன்//

நிச்சயமாக அந்த 20 நாய்களையும் போட்டுத் தள்ளவேண்டும்.

வெறிபிடித்தலையும் எந்த மிருகத்தையும் (மனிதனையும் சேர்த்துத்தான்) போட்டுத் தள்ளுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. முதலில் இருந்தே நான் குறிப்பிட விழைந்தது அவற்றைக் கொடூரமாகக் கொல்லும் முறை உடன்பாடற்றது என்பதைத்தான். ஒருவன் கொடூரமான முறையில் கொலைசெய்கிறான் என்பதற்காக அவனை அதே முறையில் கொன்று தண்டனை நிறைவேற்றுவது சரியா? மரண தண்டனை சரியா தவறா என்பதற்குள் நான் போகவில்லை. மரண தண்டனை கொடுக்கும் முறையைப் பற்றியே சொல்கிறேன். இப்போது இதை நாசூக்காகச் செய்கிறார்கள் என்றால் சரி. சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்தவரை இப்பிராணிகளைக் கொன்ற முறை நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் விதமாகவே இருந்தது.

//இதைத்தான் லூசுத்தனமான மிரட்டல் என்கிறேன்...
//

அந்த ஆங்கில வாசகம் ஒரே அர்த்தத்தைத் தரவில்லை. எனது புரிதலில் பிழை. மன்னிக்க. சந்தேகமே இல்லை. இது கிறுக்குத்தனமான மிரட்டல்.


//உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, எல்லா நாய்களையும் பிடிக்கமாட்டார்கள். நீங்கள், நகராட்சி இல்லை ஊராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி டோக்கன் வாங்கி உங்கள் நாய் கழுத்தில் கட்டினால் அது தெருவில் திரிந்தாலும் அதை பிடிக்க மாட்டார்கள்.
//

இதைத்தான் "முறைப்படுத்தவேண்டும்" என்று சொல்ல வந்தது.

குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்று எங்கே ஐயா சொன்னேன்? இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்றும் அர்த்தம் வருகிறது என்பதைத் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.

ஒரு பேச்சுக்கு ஊர் முழுதும் இருக்கும் தெருநாய்கள் அனைத்தையும் ஒழித்தாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பிறகு அடுத்த சில மாதங்களில் வருடங்களில் தெருவில் நாய்கள் நடமாட ஆரம்பிக்கும். எப்படி என்று கொஞ்சம் யோசித்தீர்களென்றால் நான் குறிப்பிட்ட "முறைப்படுத்தப் படவேண்டும்" என்பது புரியும்.

யோகன் அவர்களே

//இந்த திண்டது செமிக்க ;உடல் ஊழைச் சதை கரைய மிருக நலம் பேணுவோர்; அமெரிக்கா,ஐரோப்பாவில் குடியேறுவதே!!மேல் //

ஆக பணக்காரர்கள் மட்டும்தான் நாய் வளர்க்கிறார்கள் என்ற உங்களது புரிதலைப் புரி்ந்துகொண்டேன். நன்றி. I agree to disagree.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வந்தமா, என் தேவதையின் படத்தைப் பாத்தமா, போனமா, எந்த நாயை யார் கொன்னா எனக்கென்னன்னு போயிருக்கலாம். ஜிம்மி, மணி, டாமி, டைகர், ராஜா எல்லாம் ஞாபகத்துல வந்து அழுததுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

மன்னிச்சுக்குங்க கண்ணுகளா. 'மனிதருக்குத் தோழன்'ன்னு உங்களை இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு இந்த பூமில இடம் கிடையாது. முடிஞ்சா காட்டுக்கு ஓடிப் போயி பொழைச்சுக்குங்க.

Nakkiran said...

//வந்தமா, என் தேவதையின் படத்தைப் பாத்தமா, போனமா, எந்த நாயை யார் கொன்னா எனக்கென்னன்னு போயிருக்கலாம். ஜிம்மி, மணி, டாமி, டைகர், ராஜா எல்லாம் ஞாபகத்துல வந்து அழுததுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

மன்னிச்சுக்குங்க கண்ணுகளா. 'மனிதருக்குத் தோழன்'ன்னு உங்களை இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு இந்த பூமில இடம் கிடையாது. முடிஞ்சா காட்டுக்கு ஓடிப் போயி பொழைச்சுக்குங்க//

ரசித்தேன்.. :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வந்தா...சுந்தர்!
எனக்கு தெருவில் நாய் வளர்ப்பது பற்றிப் புரிதல் இல்லை என்ற உங்கள் கூற்று முற்றும் உண்மை!!
தெருவில் நிற்பதை வளர்ப்பு நாயாக நாம் கருதுவதோ;புரிவதோ இல்லை.நாம் தெருவில் நாய் வளர்ப்பதும் இல்லை.
தெரு நாய்க்குச் "சினிமா" காட்டும்; கூத்து வசதி படைத்தவங்க கூத்து. நாளும் பார்க்கிறோம்; அதுவும் ஓய்ந்த நடிகைகள்...அங்கே அமலா..இங்கே பிறியிர் பார்டோ..
தெரு நாய் வாலைக் குழைத்துக் கொண்டு வருவதில்லை. குலைத்துக் கொண்டு தான் வரும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...