.

Wednesday, March 7, 2007

சென்னை & மதுரை பஸ்களில் ஜி.பி.எஸ் சிஸ்டம் அறிமுகம்

செயற்கைக்கோள் மூலம் பஸ் வந்து கொண்டிருக்கும் இடத்தை பயணிகள் அறிந்து கொள்ள உதவும் ஜி.பி.எஸ் வசதி, சென்னை - மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி தெரிவித்தார்.


இந்த வசதி கொண்ட வாகனங்கள், தற்போது எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதை, பயணிகள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். செயற்கைக்கோள் உதவியுடன் இது செயல்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.


இந்த வழித்தடங்களில் உள்ள முக்கியமான பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் எதிர்பார்க்கும் பஸ் எந்த நேரத்தில், எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஏதேனும் காரணங்களால் பஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், அதற்கேற்ப பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும். இதனால் அவர்களின் நேரம் வீணாவது தவிர்க்கப்படும்.வழியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதுகுறித்து பஸ்சில் இருந்தபடியே கட்டுப்பாட்டு அறைக்கு டிரைவரால் தகவல் தெரிவிக்க முடியும்.

6 comments:

மணிகண்டன் said...

வரவேற்கவேண்டிய முயற்சி சி.பா

சிவபாலன் said...

மணிகண்டன்

நல்ல முயற்சிதான்..

செயல்பாடுகளை பொருத்திருந்து பார்க்கவேண்டும்

வடுவூர் குமார் said...

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அடையாளத்துடன் கூடிய ஜி.பி.எஸ் இருந்தால்,ஆளே எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்கலாம் அல்லவா?
:-))
நெடுந்தொலைவு பேருந்துகளுக்கு அவசியம்.

சிவபாலன் said...

வடுவூர் குமார் ,

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

யாழினி அத்தன் said...

காமெடி பண்றாங்கய்யா...

எல்லா தெருக்களும் வரையறுக்கப்பட்டபின் தான் GPS-ஐ ஒழுங்காக உபயோகப் படுத்தமுடியும். நம்ம ஊர்ல நாளைக்கு ஒரு தெரு வந்துட்டிருக்கு. சென்னைக்கெ Google Maps-ல் தெருக்களை பார்க்க முடியல.
சில நேரம் நம்ம ஆளுங்க தெரிஞ்சிட்டுதான் பேசராங்களான்னு சந்தேகமா இருக்கு. Whatever.

Daily நடக்கற road accident-ல் தினசரி அதே ரோட்ல 50 பேருக்கு மேல் உயிரிழக்கறாங்க. அதை குறைக்கிறதுக்கு ஏதாவது வழி வெச்சிருக்காங்களா?

சிவபாலன் said...

யாழினி அத்தன்,

இல்லைங்க.. நான் அறிந்தவரையில் நம்மிடம் (குறைந்த பட்சம் தமிழ்நாட்டில்) மேப் இருக்கிறது. கொஞ்ச காலம் Map Digitizing செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.

இந்தியாவில் ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் புனேயிலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் இந்த வசதி நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்திலும் இந்த முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக சென்னை - மதுரை வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்களிலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட ஆவடி - தாம்பரம் வழித்தட பஸ்களிலும் ஜி.பி.எஸ். வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இது முயற்சிதான்.. பாக்கலாம் எப்படி செயல்படுகிறது என்று.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...