.

Monday, March 12, 2007

துபாயில் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது


இன்று காலை துபாயிலிருந்து டாக்கா கிளம்பிய பங்களாதேஷைச் சேர்ந்த பிமான் விமானம் திடீரென ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று நின்றதில் 14 பேர் காயமடைந்தனர். 236 பேர் இருந்த விமானத்தில் மற்ற எவருக்கும் எந்தக் காயமும் இல்லை.

ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலெழும்பும் முன்பாக விமானத்தின் இயந்திரங்களில் தீப்பற்றிக் கொள்ள நேர்ந்ததால் விமானி விமானத்தை ஓடுதளத்தை விட்டு விலகச் செய்ததாக முதல் தகவலறிக்கை சொல்கிறது. விமானத்தின் முன் சக்கரம் கழன்று விட்டதால் மூக்கால் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் மிகுந்த பாதுக்காப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தைத்தொடர்ந்து துபாய் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. மிக பரபரப்பான காலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் நிறைய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, துபாய் வரும் விமானங்கள் பிற இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மிகச் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி , துபாய் விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பயணம் செய்பவர்கள் தங்கள் விமான நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு விமான நேரத்தை உறுதிசெய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

1 comment:

வல்லிசிம்ஹன் said...

தகவலுக்கு நன்றி.எனக்கு இது முக்கியமான செய்தி.

-o❢o-

b r e a k i n g   n e w s...