.

Thursday, April 5, 2007

ச: கிருஷ்ணர் கோவில் கட்ட ரஷ்ய அரசு இலவச நிலம்

மாஸ்கோ(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

ரஷ்யாவில் கிருஷ்ணர் கோவில் கட்ட அந்நாட்டு அரசு இலவச நிலம் வழங்கியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் கிருஷ்ணர் கோவில் கட்ட இலவச நிலம் அளிக்குமாறு உள்ளூர் இந்து அமைப்பு ஒன்றும்,கிருஷ்ண பக்த பேரவை ஒன்றும் ரஷ்ய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ரஷ்ய அரசும் அதுகுறித்து பரிசீலிப்பதாக அறிவித்திருந்தது.இதற்கு பழமைவாத கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கிருஷ்ணபக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ,கிருஷ்ணர் கோவில் கட்ட 2 ஹெக்டேர் நிலம் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

"Yahoo - Tamil"

3 comments:

கோவி.கண்ணன் said...

பதிவைப் பார்த்ததும் பெயரைப் பார்த்தேன் இடுகை இட்டவர் எழில் அல்ல !
:))))

Boston Bala said...

கோவி....

:)))

Anonymous said...

ரிஷிகள் வாழ்ந்த இடம் தான் ரஷ்யா கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதனால் தான் கண்ணனுக்கு இடம் கொடுத்திருக்கிறார்களாக்கும்.
ஜெய் கிருஷ்ணா!

-o❢o-

b r e a k i n g   n e w s...