.

Monday, May 28, 2007

ச:கேரளாவில் பருவமழை துவங்கியது

பொருளாதார நிபுணர்களிலிருந்து பங்கு வணிகர் வரை எதிர்பார்க்கும் இந்தியாவின் பருவ மழை கேரளத்தில் இன்று எட்டியதாக தெரிகிறது. திருவனந்தபுரம், மலப்புரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா என எல்லா மாவட்டங்களிலும் கடந்த 24 மணிநேரத்தில் கனத்த மழை பெய்துள்ளது. கேரள வானிலை அதிகாரிகள் இது பருவமழைதானா என நிச்சயிக்காவிடினும் தில்லி வானிலை நிலையம் இது பருவமழையே யாகும் என உறுதி செய்துள்ளது.

NDTV.com: Monsoon hits Kerala coast

1 comment:

Adirai Media said...

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 15 செ.மீ மழையும், தக்கலையில் 10 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் இந்தாண்டு முன் கூட்டியே பருவ மழை பெய்ய துவங்கியுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பொதுவாக ஜுன் 1-ந் தேதி துவங்கும் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அவர் கூறினார்

-o❢o-

b r e a k i n g   n e w s...