.

Monday, May 28, 2007

ஜப்பானிய அமைச்சர் தற்கொலை!


ஜப்பானின் விவசாய அமைச்சர் டோஷிகட்சு மட்சோகா இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 62.

வெறும் 236,000 டாலருக்கும் சற்றே அதிகமான செலவு கணக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான கேள்விக்கணைகளுக்கு உள்ளான அவர், மானத்துக்கு பயந்து இந்த முடிவு கண்டதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற கமிட்டி ஒன்றின் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக இம்முடிவை அவர் எய்தியுள்ளார். முன்னதாக, எதிர்கட்சிகள் அவருடைய பதவி விலகலை கோரி வந்திருந்தன.

பதவியேற்றிருந்த மூன்றே நாளில், அரசியல் நன்கொடைகளின்பால் செலவிடப்பட்டிருந்த 8,500 டாலர் தொகைக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பி.கு: தொழிற்மயப்பட்ட நாடுகளில் ஜப்பானில் தான் தற்கொலைகள் அதிகம்.

சி.என்.என். செய்தி

2 comments:

Boston Bala said...

---விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக---

இந்தியாவுக்கு ஒரு விசிட் அடிச்சிருந்தா அசம்பாவிதம் நடந்திருக்காதே :(

Boston Bala said...

பொதுப்பணித் துறையில் ஊழல் எதிரொலி: ஜப்பானில் அமைச்சரைத் தொடர்ந்து முன்னாள் உயர் அதிகாரியும் தற்கொலை

டோக்யோ, மே 30: ஜப்பானில் பொதுப்பணித் துறையில் நடந்த ஊழலில் அமைச்சர் தோசிகாட்சு மாட்சுவோகாவை தொடர்ந்து ஜப்பானின் பொதுப்பணித் துறையின் முன்னாள் உயர் அதிகாரி சினிசி யாமாசாகி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இன்னும் இரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக "யாமாசாகியின் "ஜே- கிரீன்' என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாமாசாகியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அந் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் பொதுப்பணித் துறை பணிகளுக்கு டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருப்பது சில நாள்களுக்கு முன்னர் தெரியவந்தது.

பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வாய்ப்பு அதிகமுள்ள ஜப்பானில் கட்டுமானப் பணிகளுக்கு அரசு பல்வேறு கடும் விதிகளை வகுத்துள்ளது. கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவை பூகம்பம் போன்ற பேரழிவுகள் வந்தாலும் ஓரளவு தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு இது போன்ற நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.

பொதுப்பணியில் நடந்த ஊழலில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததது.

ஜே-கிரீன் நிறுவனத்திடம் இருந்து தேர்தல் சமயத்தில் நன்கொடைப் பெற்றதாக ஜப்பான் வேளாண்மை அமைச்சர் தோசிகாட்சு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இப் பிரச்னை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை வெடித்தது. இது குறித்து அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து தோசிகாட்சு மீது விசாரணை நடைபெறுவதாக இருந்தது. விசாரணைக்கு சில மணி நேரத்திற்கு முன் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இப் பிரச்னை வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...