.

Saturday, May 19, 2007

உள்நாட்டு விமானங்களில் மது பரிமாற அனுமதி?

உள்நாட்டு விமானங்களில் மது அருந்துவதும் மதுவகைகள் பரிமாறப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு விமானங்களிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களிலும் மட்டும்தான் மதுவகைகள் பரிமாறப்பட்டு வந்தன.

தனியார் விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போதிருந்த மோடி லுஃப்த் விமான நிறுவனம், தனது உள்நாட்டு விமானங்களில் மதுவகைகளை இலவசமாக வழங்க முற்பட்டது. நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கிளம்பிய எதிர்ப்புகள், அரசைத் தலையிட வைத்து, விமானங்களில் 'பார்' நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வைத்திருந்த விஷயத்துக்கு இப்போது புத்துயிர் அளித்திருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல். சமீபத்தில் பிரிட்டனின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான ஒயிட் அண்ட் மேக்கே மதுபான ஆலையை, ரூ. 4,819 கோடிக்கு வாங்கியிருக்கும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, இந்த விதி சில நிறுவனங்களின் சேவைக்கு தளர்த்தப்படலாம் என்றார்.

- தினமணி

1. Booze on your DEL-MUM flight?
2. Kingfisher Airlines: Soaring ambition

1 comment:

வடுவூர் குமார் said...

என்னை கேட்டா வெளிநாட்டு பயணங்களிலும் இதை தடை செய்யவேண்டும்.
நம் மக்கள் பயணம் செய்யும் பல பயணங்களில் தன் நிலை இழக்கும் வரை ஏற்றிக்கொண்டு விட்டு "எங்களையும்" தலை குனிய வைக்கும் மக்களுக்கு ஆப்பு அடித்த மாதிரியாவது இருக்கும்.
அப்படி செய்யும் மக்கள் சதவீதம் குறைவு என்றாலும் நிறுத்தனும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...