அண்மையில் இரயில்வே அமைச்சகம் விடுத்த ஒரு சுற்றறிக்கையின்படி இரயில் பெட்டிகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்படவேண்டுமென்றும் தமிழ்நாட்டில் செல்கின்ற இரயில்களில் மட்டும் தமிழிலும் எழுதப் படும் என்ற செய்தியைக் கொண்டு ஒரிசா மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தினர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிச் சலுகை, எங்கள் ஊரிலும் ஒரியாவில் எழுதப் பட வேண்டுமெனக் கோரினர். பிற மாநில உறுப்பினர்களும் அவைநாயகரும் கூட புழக்கத்தில் இருக்கும் மூன்றுமொழி பெயர்ப்பலகைகளை கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உடனேயே அந்தச் சுற்றறிக்கையை வாபஸ் வாங்குவதாக அவைக்கு உறுதி கூறினார். ஆனால் சற்று நேரத்தில் திரும்பிவந்து அந்த சுற்றறிக்கை நாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டத்தின் படியும் ஆட்சிமொழி சட்டத்தின்படியும் இயற்றப் பட்டிருப்பதால் மீட்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும் உறுப்பினர்களின் உணர்வை மதித்து அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி சட்டதிருத்தம் முன்வைப்பதாக கூறினார்.
மேலும்..Flip-flop over 3rd language for train names
Thursday, May 17, 2007
ச: இரயில் பெட்டிகளில் இருமொழித்திட்டம் அமல் ?
Posted by மணியன் at 7:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment