.

Tuesday, June 19, 2007

பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி

இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு டிரக் குண்டுமூலம் நடைபெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்ற இந்தத் தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் மையப்பகுதியிலுள்ள அல் கிலானி பள்ளிவாசலுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அந்தப் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமாராவிலுள்ள ஷியா இனப் பள்ளிவாசல் குறிவைத்து தாக்கப்பட்டதையடுத்து, எதிர் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கும் முகமாக விதிக்கப்பட்டிருந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த ஞாயிறன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஊரடங்கு உத்திரவு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இடம் பெற்றுள்ள மிகவும் மோசமான ரத்தக்களரியான தாக்குதலில் இதுதான் என, பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

சமாராவிலுள்ள ஷியா பள்ளிவாசல் குறிவைக்கப்பட்டதை அடுத்து பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்தாதிலும் அதற்கு தெற்கு பகுதியிலும் உள்ள பல சுன்னி இன பள்ளிவாசல்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

- Tamil BBC

BBC NEWS | Middle East | Baghdad truck bomb kills dozens

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...