.

Tuesday, June 19, 2007

தலைமை ஆசிரியர் இடமாற்றம்: கிராமம் கொந்தளிப்பு.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இதுவரை பிரேம்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக கனகமணி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப்பினர் வேல்விழி தலைமையில் வாழப்பட்டு கிராம மக்கள் அனைவரும் பள்ளி தாளாளரிடம் சென்று ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரேம்குமார் பொறுப்பேற்ற பின்னர் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு நல்லபழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்தார். இதனால் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரேம்குமாரை மீண்டும் நியமிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்..

இதைப்பார்த்த பள்ளியின் தாளாளர் இது நிர்வாகத்தின் முடிவு மற்றவர்கள் தலையிட முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் செய்தனர். மாலையில் ஆசிரியர்கள் வீட்டுக்கு சென்ற பின்னர் பொதுமக்கள் அனைவரும் அந்த பள்ளிக்கு சென்று மற்றொரு பூட்டால் பூட்டிவிட்டு சென்றனர்

இந்த நிலையில் நேற்று இந்த பள்ளியியை பொதுமக்கள் திறந்தனர். தலைமை ஆசிரியர் கனகமணி இங்கு பணியாற்றக்கூடாது என்று மீணடும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை ஆசிரியர் கனகமணியை மாற்ற வற்யுறுத்தி, தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவிலலை. அதனால் வழக்கமாக150 மாணவர்கள் செல்லும் இந்த பள்ளியில் நேற்று 40 பேர் மட்டுமே சென்றனர். 110 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.

இந்த சம்பவம் குறித்து நேற்று கிராம மக்கள் கடலூரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.


தினத்தந்தி செய்தி

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

பரவாயில்லையே.. சிவாஜி டிக்கெட் கிடைச்சதா, ஸ்ரீகாந்த் வீட்டுப் பிரச்சனை என்னாச்சு போன்ற கவலைகளுக்கிடையில், பசங்க என்ன படிக்கிறாங்க... யாரு நல்ல ஆசிரியர்னெல்லாம் கவலைப்பட மக்களுக்கு நேரம் இருக்கே! பெரிய விசயம் தான்..

நெல்லிக்குப்பம் மக்களுக்கு ஒரு பெரிய ஓஓஓஓ!

-o❢o-

b r e a k i n g   n e w s...