ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட் பாளர் அமோக வெற்றி பெற்றார். பிரதீபா பட்டீலுக்கு 6,38,116 ஓட்டுகளும் எதிர்த்து நின்ற செகாவத்துக்கு 3,31,306 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்த தேர்தலில் நாடு முழுவதும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள், 47 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பிரதீபா பட்டீலுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு கட்சி மாறி விழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் 231 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதில் ஒரு ஓட்டு செல்லாதது ஆகி விட்டது.
அ.தி.மு.க.வில் 60 எம்.எல்.ஏ.க்களும், ம.தி.மு.க.வில் 6 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து அந்த அணியில் மொத்தம் 66 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இவர்களில்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா,
- ம.தி.மு.க.வைச் சேர்ந்த மு.கண்ணப்பன்,
- கம்பம் ராம கிருஷ்ணன்
ஆகியோர் ஓட்டுப் போடவில்லை.
இதனால் அ.தி.மு.க. அணி யில் இருந்து செகாவத்துக்கு 63 வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 59 ஓட்டுகளே செகாவத்துக்கு பதிவாகி இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பிரதீபா பட்டீலுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டுள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டார்களாப அல்லது ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டார்களாப என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முதலில் புறக்கணிக்கப் போவ தாக அறிவித்த அ.தி.மு.க. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டது. அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர் தலில் பங்கெடுத்து செகாவத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
கட்சி மாறி ஓட்டுப் போட்ட எம்.எல்.ஏ.க்கள் யார் என்பதை கண்டு பிடித்து விடலாம். இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-
'கட்சி மாறி ஓட்டுப் போட்டது யார்? செல்லாத ஓட்டு போட் டது யார்? என்பதை தேர்தல் கமிஷனால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். வாக்கு சீட்டில் சீரியல் நம்பர் இருக்கும். அது மட்டுமல்லாமல் ஓட்டு சீட்டின் பின் பகுதியில் உள்ள ரகசிய நம்பர் கறுப்பு பேப்பரால் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்.
தேர்தலில் வன்முறை நடந்தாலோ, அல்லது கோர்ட் டில் வழக்கு நடந்து யார் ஓட்டு போட்டது என்ற பிரச்சினை வந்தாலோ தான் அந்த ஓட்டுகளை யார் போட்டது என்று பார்த்து சொல்ல முடியும். மற்றபடி தேர்தல் கமிஷனில் இருந்து எதுவும் சொல்ல மாட்டார்கள். மற்ற படி கட்சி ரீதியாக அவர்கள் விசாரித்தால் கூட உண்மை வெளிவராது.'
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மாலைமலர்
1 comment:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தங்கள் தொகுதி மக்களிடம் கேட்காமல் தங்கள் தானைத் தலைமையிடம் கேட்கும் கொடுமை என்று மாறும்???
Post a Comment