.

Monday, July 23, 2007

ஒரிசா: துண்டு துண்டாய் பச்சிளம் சிசுக்களின் உடல்கள்

ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த மருத்துவமனையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பிறகு ஆஸ்பத்திரி அருகே மலை போல குவிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரி கழிவு குப்பை பகுதியில் சோதனை நடத்தினார்கள். அந்த குப்பை கிடங்கில் ஏராளமான பாலிதீன் பைகள் இறுக கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன.

அந்த பாலிதீன் பைகளை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாலிதீன் பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்தன. தலை, வயிறு, கை, கால்கள் என துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருந்தன. எல்லா உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

மொத்தம் 132 பாலிதீன் பைகளை போலீசார் கைப்பற்றினார்கள். இதில் சுமார் 30 பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை உறுதிப்படுத்த 30 பாலிதீன் பைகளில் கண்டெ டுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை களின் உடல்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நபகான்பூர் தனியார் மருத்துவமனை மானேஜர் சியாமாசாகுவை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...