.

Monday, July 23, 2007

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதான வேட்பாளர்கள் மனுதாக்கல்

புதிய குடியரசு துணைத்தலைவரைத் தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரி களின் வேட்பாளராக முகமது ஹமீத் அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லா போட்டியிடுகிறார். மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ரஷீத் மசூத் நிறுத்தப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியாக மேல்சபை செயலாளர் யோகேந்திர நரேன் அறிவிக்கப்பட்டுள் ளார். அவரிடம் கடந்த 20-ந் தேதி 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முகமது ஹமீத் அன்சாரி இன்று 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இடதுசாரி கட்சித்தலைவர் கள் சீத்தாராம் எச்சூரி, டி. ராஜா மற்றும் மத்திய மந்திரிகள் சரத்பவார், லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், டி.ஆர். பாலு உடன் இருந்தனர். ஹமீத் அன்சாரியின் வேட்பு மனுவில் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா இன்று மதியம் 12 மணி அளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

வேட்பு மனுதாக்கல் இன்று டன் முடிகிறது. வேட்பு மனுக் கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாள்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ஓட்டுப்பதிவு நடை பெறும். பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போடுவார்கள். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

பாராளுமன்ற இரு அவை களிலும் மொத்தம் 781 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் 401 பேர் காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களாகும்.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...