.

Monday, July 23, 2007

டாக்டர் ஹமீத் அன்சாரி: சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் தலைவரும், சவூதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதருமான டாக்டர் ஹமீத் அன்சாரி பற்றி சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த ஜாகீர் ஹுசைனைப்போலவே சிறந்த கல்வியாளரான டாக்டர் முஹம்மத் ஹமீத் அன்சாரி, அன்னாரைப்போலவே துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.
இந்தியா-சவூதிஅரேபியா இடையே அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளை அன்சாரி தனது காலத்தில் மேம்படுத்தியிருந்தார்.

"ஒவ்வொரு இந்தியரும் டாக்டர் அன்சாரியின் புதிய பதவி குறித்து பெருமிப்படைவர். சவூதியில் தூதரக உயர் அதிகாரியாகவும், பின்னர் தூதராகவும் அவர் செயலாற்றிய காலங்களிலிருந்தே அவரை நன்கு அறிந்துள்ளேன். சவூதி அரேபிய நகரங்களில் இந்தியத்தூதரகப் பள்ளிக்கூடங்களை நிறுவியதில் டாக்டர் அன்சாரியும் அவர் துணைவியார் சல்மா அவர்களும் கொண்டிருந்த பங்கு அளப்பரியது" என்றார் இந்தியா ஃபாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் S.A. ஜெயசீலன்.

"நேர்மைக்கும், அர்ப்பணிப்புணர்வுக்கும் அவரோர் உதாரணம்" என்ற சாம் மாத்யூ, இராக்-குவைத் போர்க்காலத்தில், ஒரு தூதராகவும், சக இந்தியராகவும், டாக்டர் அன்சாரியின் உத்வேகமான செயலாற்றலைப் புகழ்ந்தார். "இந்திய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கை ரியாத்துக்கு வரவழைத்தவரும் டாக்டர் அன்சாரி" என்றார்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான இந்தியர் அமைப்புகள் தமது பெருமிதத்தையும், டாக்டர் ஹமீத் அன்சாரிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக ஐ.மு.கூட்டணிக்கு நன்றியையும் வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா தவிர ஆஸ்திரேலியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...