.

Thursday, July 19, 2007

'இரண்டு சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்' - கலாம்.

குடியரசுத்தலைவராக தனது பதவிக்காலத்தின் கடை வாரத்தில் உள்ள அப்துல்கலாம், குடியரசுத்தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவராக, அநேகமாக அவர் கலந்துக்கொண்ட கடைசி நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார். " என்னிடம் இரண்டு சிறிய சூட்கேஸ்களே இருக்கின்றன, அவற்றுடனே நான் வெளியேற ஆயத்தமாகி வருகிறேன்" என்ற கலாமிடம் ஒரு பெரிய நூலகமே இருக்கிறதாம். "அவை அனைத்தும் என் தனிஉடமைகள்"

நாட்டு மக்களுக்கு அறிவுரையாக, "பிரதிபலன் எதிர்பார்த்து தரப்படும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள்" என்றார் கலாம். " அவை ஆன்மாவின் உள்ளொளியை அணைத்துவிடும்" என்றார் - மனுஸ்மிருதியை பின்மொழிந்து.

Courtesy: Kalam: I will go with two small suitcases - TOI

3 comments:

Anonymous said...

//மனுஸ்மிருதியை பின்மொழிந்து.//

திட்டுவதற்கு இன்னும் யாரும் வரவில்லையா? ஆச்சரியம்!!!!

Anonymous said...

" என்னிடம் இரண்டு சிறிய சூட்கேஸ்களே இருக்கின்றன, அவற்றுடனே நான் வெளியேற ஆயத்தமாகி வருகிறேன்"

பாம் வைக்கபோறார்ன்னு புடிச்சா என்ன பண்ணுவாரு

Thamizhan said...

இரண்டு பெட்டிகளில் என்ன இருக்கிறதோ,பலரின் இதயங்களில் நிறைந்து இருக்கிறார்.
தனது பட்டுக்கோட்டை வீடு,சென்னயில் இரண்டு வீடுகள் இவற்றைக் கோடிக்கணக்கில் புதுப்பித்து,டில்லியிலும் வசதியாக வீடு.இதெல்லாம் போதாது என்று அமெரிக்கக் கம்பெனிகளிடம் குடும்பத்துக்கு வியாபார முய்ற்சிகள்.இதையெல்லாம் செய்து கொண்டவர் மனுதர்ம வெங்கடராமன்.
பலருடைய முகத்தில் கரியைப் பூசி,புன்னகையுடன் தமிழகம் திரும்பும் தலை மகன் வாழ்க!

-o❢o-

b r e a k i n g   n e w s...