.

Friday, August 24, 2007

அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் - நாஞ்சில் சம்பத்

நாசரேத், ஆக. 24-
வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பது பா.ம.க. வின் வழக்கம். அதனால், டாக்டர் ராமதாஸ் விரைவில் எங்கள் அணிக்கு வந்து விடுவார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ம.தி.மு.க.வின் 14-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

ம.தி.மு.க. கடந்த 14 ஆண்டுகளாக உழைத்ததற்கு தமிழக மக்கள் இன்னும் கூலி கொடுக்கவில்லை. காலமும், கடவுளும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தால் எங்களுக்கும் சந்தர்ப்பம் வரும். அந்த சந்தர்ப்பம் விரைவில் கனியும் என்று உறுதியாக கூறுகிறேன்.

சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மத்திய, மாநில அரசுகள் ஆடி வருகின்றன. பா.ம.க.வின் அரசியல் வரலாற்றை கவனிக்கும்போது அக்கட்சி வெற்றி பெறும் கூட்டணியில்தான் இருக்கும். இப்போது தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்ட ராமதாஸ், விரைவில் எங்கள் கூட்டணிக்கு வந்து விடுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூட Ôவண்டியை கிளப்புங்கள்; ஓடி வந்து ஏறிக்கொள்கிறோம்Õ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

2 comments:

சிவபாலன் said...

நெருப்பில்லாமல் புகையுமா?

எங்கப்பா பொக்கே.. கொடுங்க நம்ம மருத்துவர் அய்யா கையில்..Ha Ha Ha..

TBCD said...

ஆமாம்......அரசியல் கார்டுனிஸ்ட்களா...கெட் ரெடி..

ஒரு சுப்பர் மேட்டர் இன் வெயிட்டிங்..

-o❢o-

b r e a k i n g   n e w s...