கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டதாக அமெரிக்காவில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது.
ஆனால் இது வெறும் வதந்திதான், காஸ்ட்ரோ நல்ல உடல் நலகத்துடன் உள்ளார் என்று கியூப அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கீழே, கரீபியன் கடலில், கரிவேப்பிலை அளவுக்கு உள்ள குட்டித் தீவுதான் கியூபா. அமெரிக்காவின் நீண்ட கால எரிச்சல். கியூபாவின் தலைவராக, அதிபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் காஸ்ட்ரோ. புரட்சி வீரனானா காஸ்ட்ரோவை பதவியிலிருந்து நீக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவரை அகற்றவும், கொலை செய்யவும் கூட பலமுறை முயற்சிள் நடந்தன. ஆனால் அத்தனையையும் மீறி மக்கள் ஆதரவுடன் கியூபாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக ஆட்சி அதிகார பொறுப்பை தன்னுடைய தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி டிவியில் பேட்டி கொடுத்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியன்று அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் டிவியிலோ அல்லது பத்திரிக்கையிலோ வரவில்லை. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கியூபா நாட்டினர் அதிகம் வசித்து வரும் அமெரிக்காவின் மியாமி நகரில் செய்தி பரவியது. இதனால் கியூபாவிலும் கூட கவலை பரவியது. ஆனால் இது வெறும் வதந்திதான் என்று கியூப அமைச்சர் ஒருவர் மறுத்துள்ளார். காஸ்ட்ரோ நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி சிலரால் கிளப்பப்பட்ட வதந்தி. காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயம் நல்ல மன நிலையுடன் கூடியவர்களா இருக்க முடியாது. இவ்ரகள் இறந்து விட்டார் என்று சொல்லச் சொல்ல அவர் இன்னும் பல காலம் உயிரோடு இருந்து எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.
Tuesday, August 28, 2007
காஸ்ட்ரோ குறித்து அமெரிக்காவில் 'வதந்தி'!
Posted by
Adirai Media
at
6:29 PM
0
comments
யுபிஏ-இடது கூட்டுக்குழு அமைக்கப்பட்டது
அணுசக்தி உடன்படிக்கையின் கூறாக அமெரிக்க ஹைட் சட்டத்தின் தாக்கம் இந்திய வெளியுறவு கொள்கைகளை பாதிப்பதைப் பற்றி ஆராய யுபிஏ- இடதுசாரிகட்சிகளின் கூட்டுக்குழு அமைக்கப்படவிருக்கிறது. இன்று இந்திய கம்யூனிஸ்ட்களிடமும் பின்னர் மார்க்சிய கம்யூனிஸ்ட்களிடமும் காங்கிரஸ் நடத்திய மராத்தன் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவின் அதிகாரம், எல்லைகள், அமைப்பு போன்றவை அடுத்த இருநாட்களில் முடிவாகும். இக்குழுவின் ஆய்வறிக்கை வரும்வரை காங்கிரஸ் 123 உடன்பாட்டை மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் இருக்க சம்மதித்துள்ளது என சீதாராம் யெச்சூரி கூறினார்.
Left-UPA peace panel this week- Hindustan Times
Posted by
மணியன்
at
5:09 PM
0
comments
மனித உரிமைகள்: எங்கே செல்கிறோம்?
பிஹாரின் பகால்பூர் மாவட்டத்தில் நாத்நகரில் கோவில் அருகே சாமி கும்பிட வந்த சாந்திதேவி என்பவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற முகமது ஔரங்கசீப் என்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததும் இல்லாமல் காவல் துணை ஆய்வாளரே தனது மோட்டார்சைக்கிளில் கட்டி தரையில் இழுத்துச் சென்ற நிகழ்ச்சி நடந்தேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது பகால்பூரின் டிஐஜி சர்மா காவலர்கள் பொதுமக்களிடமிருந்து திருடனைக் காப்பாற்றியிருப்பதை ஊடகங்கள் எதிர்மறையாகவே காட்டுகின்றன என்றார். மோட்டார் சைக்கிளில் தப்பியோடாமல் இருப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஔரங்கசீப் சாலை மேடுபள்ளத்தினால் தடுமாறி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்றார்.
DNA - India - Man brutally thrashed by crowd for petty theft - Daily News & Analysis
Posted by
மணியன்
at
4:51 PM
2
comments
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது
இந்திய உளவுத்துறை ஐந்து மாதங்கள் முன்னரே எட்டு கிலோ இராணுவதர வெடிமருந்துகள் ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்ட சம்பவங்களுக்காக ஹர்கத் உல் ஜிஹாதி யெ இஸ்லாமி தீவிரவாதகுழுவிற்கு கடத்தப்பட்டதை அறிந்திருந்தது. மார்ச் 2007இல் இந்தோ-பங்களா எல்லையில் கைது செய்யப்பட்ட ஹர்கத் குழுவினரிடமிருந்து இதை அறிந்தபோதே எச்சரிக்கை மணி அடிக்க தொடங்கியது. ஔரங்காபாத் நகர கணிப்பொறியாளர் ஷேக் நைமிடமிருந்து ஹைதராபாத்தில் திட்டமிட்டிருந்த செயல்களைப் பற்றி அறிந்தனர். அவர்மூலம் தெரிந்த ஒரு வங்கி ஊழியரை காவலர்கள் வளைத்துப் பிடிக்கும்போது அவரிடமிருந்து வெடிபொருட்கள் கைமாறிவிட்டன. சங்கேதங்கள் மூலமே அறிந்த அவர்களைப் பற்றி காவலர்களால் மேலே தொடரமுடியவில்லை.
The Hindu : Front Page : Intelligence had warned of strikes
Posted by
மணியன்
at
4:38 PM
0
comments
ராகிங் கொடுமை... (பெண்களும் சளைத்தவர்கள் இல்லை )
ராகிங்: மாணவியை நிர்வாணமாக்கிய மாணவிகள்
ஆகஸ்ட் 28, 2007
டேராடூன்: முதலாமாண்டு மாணவியை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து கொடுமைபடுத்தியுள்ளனர் சீனியர் மாணவிகள்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய மாணவர் படை பயிற்சி (என்.சி.சி) முகாம் சமீபத்தில் நடைபெற்றது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், டேராடூனில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பங்கேற்றார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவி ரிக்ஷா தொழிலாளியின் மகள். இந்த மாணவியை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சீனியர் மாணவிகள் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவிகள் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாக திட்டியதோடு வலுக்கட்டாயமாக நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
எனது மகள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்று அந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து என்.சி.சி முகாம் நிர்வாகிகள் கூறுகையில்,
என்.சி.சி பயிற்சியின் போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ராக்கிங் நடந்திருக்கலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தட்ஸ்தமிழ்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
2:03 PM
4
comments
தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழா

பகல் 9.15 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து வீதி ஊர்வலமாக ஆரம்பித்து பகல் 10.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியவாகள் காலை முதல் ஆலயத்தில் கூடத் தொடங்கினார்கள்.

தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள், காவடிகள் எனப் பலவும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கூறி அழுது புலம்பிய காட்சிகள் அனைவரின் மனத்தையும் தொடுவதாகக் காணப்பட்டது.

Source [தகவல் ஆதாரம்]: www.pathivu.com
Posted by
Anonymous
at
1:33 AM
0
comments
விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா - மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்குமிடையே கடும் சண்டை மூண்டது.
திங்கட் கிழமை பிற்பகல் 4 மணியளவில் மன்னார் - வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளை அண்டிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவத்தினர் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடாத்தினர்.இரு மணி நேரமாக இரு தரப்புக்குமிடையில் கடும் சண்டை மூண்டது. இச் சமரில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
Posted by
Anonymous
at
12:31 AM
0
comments
அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது

அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது
இந்தியத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ( Vice President ), பிரதமர் மற்றும் துபாய் மன்னர் ஆகியவற்றை ஒருசேர வகிக்கும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
புதிய கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று ( 26 ஆகஸ்ட் 2007 ) ஷேக் முஹம்மது துபாயில் உள்ள சில பள்ளிகளுக்கும், அஜ்மானில் உள்ள சில பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து உற்சாக மூட்டினார்.
மேலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கிட கல்வி அமைச்சர் டாக்டர் ஹனீப் ஹஸனிற்கு உத்தரவிட்டார். சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உடல்நலக்கல்வி ஆகியவை குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
www.gulfnews.com
http://www.gulfnews.com/nation/Education/10149348.html
Posted by
முதுவை ஹிதாயத்
at
12:07 AM
0
comments
Monday, August 27, 2007
எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி
பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் பிபிசி
BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'
Posted by
Boston Bala
at
11:05 PM
1 comments
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் இராஜிநாமா
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். நீதித் துறையை அவர் தலைமையேற்று நடத்துவது குறித்து, தொடர்ந்து பல மாதங்களாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.
கடந்த ஆண்டு ஒன்பது அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கப்பட்ட விடயத்தில் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தீவிரவாதத்தின் மீதான போர் என புஷ் அரசால் கூறப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் அதிபர் புஷ் அவர்களின் அதிகாரங்களை விரிவுபடுத்த அவர் அனுமதித்தார் என்கிற விடயம் தொடர்பாக அவர் அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து வந்தார்.
தமிழ் பிபிசி
US Attorney General Gonzales Resigns | World Latest | Guardian Unlimited
Gonzales has been loyal voice for administration - CNN.com
Posted by
Boston Bala
at
10:58 PM
0
comments
பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களில் குறைகள்: CAG
அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நடுவண் அரசின் சமூகநீதி அமைச்சு மற்றும் பழங்குடியினர் அமைச்சுக்கள் சரிவர பயன்படுத்தவில்லை என தலைமை கணக்கு ஆய்வாளரின் அறிக்கை கூறுகிறது. மற்ற மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. கல்வி வளர்ச்சியின் இரு எடுத்துக்காட்டுகளாக மொத்த பதிகை விகிதம்(Gross Enrolment Ratio) மற்றும் மொத்த வெளியேறும் விகிதம் (Gross Dropout Ratio) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை கீழ்நோக்கி செல்வதை காட்டுகிரது. வெளியேறும் விகிதம் பொது மாணவர்களுக்கு 6.7%ஆகவும் இவர்களுக்கு 15.1% ஆகவும் 2001இல் இருந்தது 2003-04 ஆண்டில் 10.4% ஆகவும் 16.6% ஆகவும் மோசமாவதை சுட்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காதது, தாமதமாக அல்லது குறைவாக பட்டுவாடா செய்தது, வேறு திட்டங்களுக்கு மாற்றியது போன்ற குறைகள் மற்றும் இத்திட்டத்தை பொதுமக்கள் அறியுமாறு விளம்பரம் செய்யாதது இந்த இடைவெளி வளர்வதற்கு காரணங்களாக அவ்வறிக்கை கூறுகிறது.
DNA - India - CAG finds fault in SC, ST education schemes - Daily News & Analysis
Posted by
மணியன்
at
8:32 PM
0
comments
ஆர்குட் தளத்தில் மாயாவதியின் போலி தகவல்
கூகிளின் ஆர்குட் தளம் மும்பையில் நடந்த கொலைகளுக்கு பின்னர் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தைப் பெற்று வருகிறது. இதனை வலுப்படுத்துமாறு உபி முதல்வர் மாயாவதி பெயரில் ஆர்கூட் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் தவறான மற்றும் இழிவான முறையில் அவரது தனித்தகவல் (Profile) பதியப்பட்டுள்ளது. இதனை அறிந்த உபி அரசு முழுவதும் ஆய்வு செய்து குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
DNA - India - Probe ordered into Maya's profile on Orkut - Daily News & Analysis
Posted by
மணியன்
at
8:11 PM
0
comments
தா.கிருட்டிணன் கொலைவழக்கு ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி உச்சநீதமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இந் நிலையில் கொலை வழக்கில் முக்கிய சாட்சியும், முதல் சாட்சியுமான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியல் பலம் கொண்டவர்.
எனவே இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை மதுரையிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அசோக் பான் மற்றும் சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கை மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்: Ta.Krittinan murder case transfered to Andra
Posted by
மணியன்
at
8:00 PM
0
comments
துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி
துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி
துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியான செய்தியறிந்து உடனடியாக தாயகம் திரும்பினார். இச்செய்தி அலியின் குடும்பத்தினரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.
முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home
Dubai resident's son among the dead in India blasts
Posted by
முதுவை ஹிதாயத்
at
7:18 PM
0
comments
மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இலக்கு 282 ரன்கள்
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒரு தின கிரிக்கெட் போட்டி எக்பாஸ்டனில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான குக் மற்றும் பிரையர் ஆகியோர் முறையே 40 ரன்கள், 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர்சன் 9 ரன்களிலும், காலிங்வுட் 44 ரன்களிலும், ஷா 19 ரன்களிலும், போப்ரா 10 ரன்களிலும், இயான் பெல் 79 ரன்களிலும், ப்ராட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ட்ரெம்லெட் 19 ரன்களுடனும், ஆன்டர்சன் 0 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பியூஸ் சாவ்லா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், முனாப் படேல், ரமேஷ் பொவார், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்க உள்ளது
Posted by
வாசகன்
at
7:07 PM
0
comments
b r e a k i n g n e w s...


