.

Monday, August 27, 2007

தா.கிருட்டிணன் கொலைவழக்கு ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி உச்சநீதமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந் நிலையில் கொலை வழக்கில் முக்கிய சாட்சியும், முதல் சாட்சியுமான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியல் பலம் கொண்டவர்.

எனவே இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை மதுரையிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அசோக் பான் மற்றும் சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கை மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்: Ta.Krittinan murder case transfered to Andra

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...