.

Monday, August 27, 2007

பத்துஆண்டுகளாக நடந்த பணமோசடி வழக்கிலிருந்து ஹேமமாலினி விடுதலை.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் 1997-ம் ஆண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு ஆடுவதற்கு நடிகை ஹேமமாலினி ஒப்புக்கொண்டார். இதற்காக நிகழ்ச்சி அமைப்பாளர் சுரேஷ் குல்ஜாரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார்.

ஆனால் அவர் ஒப்புக் கொண்டபடி அந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து சுரேஷ் குல்ஜார் ஹேமமாலினி மீது கோட்டா கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு காரணங் களுக்காகத்தான் அந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஹேமமாலினி கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியை மாவட்ட அதிகாரிகள் ரத்து செய்து விட்டனர்.

இதனால் ஹேமமாலினி மீதான வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறினார். இதையடுத்து பண மோசடி வழக்கில் இருந்த ஹேமமாலினி விடுவிக்கப்பட்டார்.

இது பற்றி ஹேமமாலினி கூறும்போது:-

"மோசடி வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. இது பற்றி நான் வேறுஎதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...