.

Monday, August 27, 2007

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி 31 ஆகஸ்ட் முதல்

7-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதிவரை சென்னையில் நடக்கிறது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானங்களில் போட்டி நடக்கிறது.

இந்தப்போட்டியில் மொத்தம் 11 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. `ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஐப்பான், மலேசியா, ஆங்காங், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும், `பி' பிரிவில் இந்தியா, கொரியா, சீனா, வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தப்போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த சில தினங்களாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனா அணி நேற்று இரவு சென்னை வந்தது.

ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இன்று காலை சென்னை வந்தனர். இதையொட்டி விமானநிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இதே போல பாகிஸ்தான் வீரர்கள் தங்கும் சவேரா ஓட்டலிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...