பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் பிபிசி
BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'
Monday, August 27, 2007
எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி
Posted by Boston Bala at 11:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
வழக்கமாக புளிச்சமாவாக இருக்கும் சற்றுமுன் செய்திகளில் இது புதிதாக இருக்கிறது, உயிருடன் புதைப்பது மிக கொடுரமான ஒரு செயல். எய்ட்ஸ் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தியதற்காக கேரளாவில் திரை நட்சத்திரம் முதல் குரல் கொடுக்கும் இந்தியா எவ்வளவோ மேல் எனத்தோன்றுகிறது.
Post a Comment