.

Wednesday, February 28, 2007

பட்ஜெட் 2007 லைவ்

புதுடில்லி : பார்லிமென்ட்டில்2007 08 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார். இதில் அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் . அன்னிய செலவாணி கையிருப்பு 180 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும்,பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய நிதியமைச்சர் இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும் , அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, * விவசாய கடன் வழங்க ரூ 2,25000கோடி ஒதுக்கீடு 2007 08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்*விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம் *தமிழகத்தில் பாசனஏரிகள் , குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ2182 கோடி ஒதுக்கீடு * உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு * *12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் * 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை * பள்ளிகல்வியை ஊக்குவிக்க 23142 கோடி ஒதுக்கீடு * மேல்நிலை கல்விக்கு3794 கோடி ஒதுக்கீடு* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு * 912 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை * 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம் * ஆசிரியர் பயிற்சி கல்லுõரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும் * இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி 969 கோடி ஒதுக்கீடு* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு * போலியோ ஒழிப்பிற்கு 1290 கோடி ஒதுக்கீடு * கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை *ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 12000 கோடி ஒதுக்கீடு மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை * சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு 18000 கோடியாக அதிகரிப்பு* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன.

தினமலர்

3 comments:

✪சிந்தாநதி said...

update

வரிக்குறைப்புகள்

* பெட்ரோல் டீசலுக்கு உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு

* சமையல் எண்ணெய்க்கு வரி குறைப்பு

*பல்வேறு பொருட்களின் சுங்க வரி விகிதங்கள் குறைப்பு

* மருத்துவ சாதனங்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு

* பயோ டீசசலுக்கான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கம்

✪சிந்தாநதி said...

update

மேலும்...

*தனிநபர் வருமான வரிவரம்பு 10 ஆயிரம் அதிகரிப்பு ( உச்சவரம்பு 1,10000 ஆக அதிகரிப்பு )<

*பெண்களுக்கு வருவாய் வரிவரம்பு 145000 ஆக அதிகரிப்பு

* மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவரம்பு 1,95000

* விவசாய கடன் வழங்க ரூ 2,25000 கோடி ஒதுக்கீடு 2007 08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்

* விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம்

* தமிழகத்தில் பாசனஏரிகள், குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ 2182 கோடி ஒதுக்கீடு

* உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு

* 12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் கிராமப்புற சாலை மேம்பாட்டிற்காக ரூ 4000 கோடி ஒதுக்கீடு

* 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை

* பள்ளிகல்வியை ஊக்குவிக்க ரூ 23142 கோடி ஒதுக்கீடு

* மேல்நிலை கல்விக்கு ரூ3794 கோடி ஒதுக்கீடு

* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு

* 912 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை

* 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம்

* ஆசிரியர் பயிற்சி கல்லுõரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும்

* இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி

* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி ரூ969 கோடி ஒதுக்கீடு

* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு

* போலியோ ஒழிப்பிற்கு ரூ1290 கோடி ஒதுக்கீடு

* கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை

*ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ 12000 கோடி ஒதுக்கீடு மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

* சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு ரூ18000 கோடியாக அதிகரிப்பு

* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு

* முறைசாரா தொழிலாளர்கள் நலனுக்காக புதிய காப்பீடு திட்டம்

*தங்க நாற்சசக்கரசசாலையை விரைவில் முடிக்க நடவடிக்கை

* புதிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து பரிசீலனை

* சிறுதொழில்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

* வரி ஏய்ப்பை தடுக்க கடும் நடவடிக்கை

* கோவை விவசாய பல்கலைகழகத்திற்கு ரூ50 கோடி ஒதுக்கீடு

*டில்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ 350 கோடி ஒதுக்கீடு

மணியன் said...

வரி விவரங்கள்:
தனிநபர் வருமான வரி விலக்கு எல்லை ரூ.1,10,000
பெண்களுக்கான வருமான வரி விலக்கு எல்லை ரூ.1,45000
முதுகுடிமக்களுக்கு வருமான வரி விலக்கு எல்லை ரூ.1,95000
பொருள் மற்றும் சேவை வரி (Good and services tax )- ஏப்ரல் 1, 2010 முதல்
விவசாயமல்லாத பொருட்களுக்கு உயர்ந்த வரி எல்லை: 2.5%
சேவை வரி வீதத்தில் மாற்றமில்லை
மத்திய விற்பனை வரி CST 4% லிருந்து 3% ஆகக் குறைப்பு

-o❢o-

b r e a k i n g   n e w s...