.

Wednesday, February 28, 2007

பட்ஜெட் : பங்குசந்தையில் வீழ்ச்சி

மும்பை: பார்லிமென்டில் 200708 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின்னர் பங்குசநதை பெரும் சரிவை கண்டது. சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.மாலை 4 மணி நிலவரப்படி , சென்செக்ஸ் 12938.09 புள்ளியாக இருந்தது.சுமார் 540.74 புள்ளிகள் சரிவை கண்டது. நிப்டி 3745.30 புள்ளியாக இருந்தது. சுமார் 148.60 புள்ளி சரிவை கண்டது.

விலை குறையும் பொருட்கள்

1. ரெடிமேட் உணவு பொருட்கள்
2. பிஸ்கட்டுகள்
3. "மவுத் ப்ரஷ்னர்'கள்
4. காலணிகள்
5. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்,"பில்டர்'கள்
6. குடைகள்
7. சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய்
8. நாய் பிஸ்கட்
9. மொபைல் போன்கள்
10. கம்ப்யூட்டருக்கு தேவைப்படும் பிளாஷ் டிரைவ்,
"டிவிடி' டிரைவ் மற்றும் ரைட்டர்
11. சொட்டு நீர் பாசன கருவிகள்
12. குறிப்பிட்ட சில மருத்துவ கருவிகள்
13. கடிகார உதிரி பாகங்கள்
14. வைரம் மற்றும் செயற்கை வைரங்கள்
15. ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்
16. இரண்டாம் நிலை உருக்கு
17. நுõல் இழைகள்
18. பாலிஸ்டர் நுõலிழைகள்
19. கச்சா பவளங்கள்
20. அகழ்வுப் பணி இயந்திரங்கள்
21. கல்கரி
22. பிளைவுட்கள்
23. பயோ டீசல்

விலை அதிகரிக்கும் பொருட்கள்

1. சிகரெட் மற்றும் பீடிகள்
2. "செட் டாப் பாக்ஸ்' கருவிகள்
3. தனிப்பட்ட உபயோகத்துக்காக இறக்குமதி செய்யப்படும்குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்

source தினமலர்.

1 comment:

Anonymous said...

அமெரிக்கா, சீனா சந்தைகளிலும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதுவும் ஒரு காரணம்.

வெரும் பட்ஜெட் மட்டும் காரணம் அல்ல.

-o❢o-

b r e a k i n g   n e w s...