.

Wednesday, February 28, 2007

இந்தியாவிற்கு பாகிஸ்தான் திருப்பித் தரவேண்டிய கடன்தொகை ரூ.300 கோடி.

இந்தியாவிற்கு ரூ.300 கோடி பாகிஸ்தான் கடன் பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளுதார புள்ளி விவர அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த போது இந்தியா தனது கடன் தொகையாக ரூ.50 கோடியை பாகிஸ்தானிடன் திருப்பிக் கொடுத்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் தான் தனது கடன் தொகையை இந்தியாவிடம் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதையும் அந்த புள்ளி விவர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

1990-91 –ம் ஆண்டு பொருளாதார புள்ளி விவர அறிக்கையிலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- தினமணி

4 comments:

மாசிலா said...

காந்தி கணக்குல எழுதிக்க சொல்லுங்க!

மாசிலா said...

பாக்கிஸ்தான் காரங்களுக்கும் நம்ம ராமரை பிடிக்கும்னு என்ன சூட்சமமா செய்து இருக்காங்க பார்த்தீங்களா!

கோயிந்தா, கோஓஒ யிந்தா!!!

கவிதா | Kavitha said...

காந்தி கணக்குல தான் விட்டுகிட்டு வரோம்.. அதான் இப்பவும் அது நிலுவையில் உள்ளது..

ஆனா எனக்கு ஒரு சந்தேகம் , நாம் அவங்களுக்கு 50 கோடி தர வேண்டும், அவங்க நமக்கு 300 கோடி தர வேண்டும்.. நாம் அந்த 300-50=250 கோடி அவங்க கணக்குல வைத்து இருக்கலாம் இல்ல..? சரியா? தப்பா?

மாசிலா said...

கவிதா//ஆனா எனக்கு ஒரு சந்தேகம் , நாம் அவங்களுக்கு 50 கோடி தர வேண்டும், அவங்க நமக்கு 300 கோடி தர வேண்டும்.. நாம் அந்த 300-50=250 கோடி அவங்க கணக்குல வைத்து இருக்கலாம் இல்ல..? சரியா? தப்பா?//


ஓஹோ, அப்படியா?

அப்படின்னா, ரெண்டாவது 'கோஓஓ யிந்தா'விலே இருந்து ரெண்டு 'ஓஓ'வை கழிச்சிக்குங்க. கணக்கு சரியாகிடும்.
:-)

-o❢o-

b r e a k i n g   n e w s...