.

Monday, February 26, 2007

ரயில்வே பட்ஜட் லைவ்

சற்றுமுன் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த 2007-2008ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

முதல் வகுப்பு ஏசி கட்டணம் குறைகிறது

புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விலையில் ரூ 1 குறைக்கப்படுகிறது

அதிவேக ரயில்களில் 2ம் வகுப்புக்கான கட்டணத்தின் மீதான சர்சார்ஜ் 20 சதவீதம் குறைக்கப்படும்

ஐஐஎம் அகமதாபாத்தில் ரயில்வே நிர்வாகம் குறித்த பிரிவு தொடங்கப்படும்

ரயில்வே தனியார்மயமாகாது

முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

எஃகு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தனி ரயில்கள்

32 புதிய ரயில்கள் அறிமுகம்

டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாம்டாப் வழங்கப்பட்டு, காலியான சீட்கள் குறித்த விவரம் அப்டேட் செய்யப்படும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மின் மயமாக்கப்படும்

8 புதிய ஏழைகள் ரதம்ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படும்

ரயில் வருகைகிளம்பும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்

ரயில்வே இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பொதுப் பெட்டிகளில் (அன்ரிசவர்ட்)மரக் கட்டை சீட்களுக்கு பதிலாக குஷன் சீட்கள் போடப்படும்.

பிபாவாஜெய்ப்பூர் இடையே இரட்டை அடுக்கு ரயில் விடப்படும். இந்த சோதனை ரயில் வெற்றி பெற்றால் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

சரக்குப் போக்குவரத்துக்கு 3 அடுக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

முன் பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் 8,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்படும்

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் ரயில் டிக்கெட் விற்பனை

பால், காய்கறி கொண்டு போக பயணிகள் ரயில்களில் தனிப் பெட்டிகள்

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு 50% கட்டண சலுகை

முதியோர்கள், பெண்களுக்கு லோயர் பர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...