.

Monday, February 26, 2007

நம்பிக்கை வாக்கெடுப்பில் முலாயம் வெற்றி

எதிர்க் கட்சிகளின் ஒட்டு மொத்த ராஜினாமா, அமளிக்கு இடையே இன்று சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ்.

402 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 201 உறுப்பினர்கள் தேவை.

இதில் கடந்த 25ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 223 வாக்குகள் கிடைத்தன. இந் நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பின்போது பாஜக தவிர்த்த எதிர்க் கட்சிகள் வரிசை காலியாக இருந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்ட நிலையில் பாஜகவினர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜினாமா செய்த பகுஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியிலும் பாஜகவினர் உள்ளேயும் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் முலாயம் அரசு வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அரசுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் தேர்தல் முடியும் வரை முலாயம் சிங்கே முதல்வராக பொறுப்பில் இருக்க முடியும். இம் மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி- தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...