.

Thursday, March 1, 2007

பாலியல் குற்றவாளிகளுக்குத் தனி வாகன பதிவெண் பலகை

அமெரிக்கா, ஒகையோவில்(Ohio) பாலியல் குற்றவாளிகளுக்கு ஃப்ளோரசண்ட் பச்சை வண்ணத்தில் வாகன பதிவெண் பலகை வழங்கப்பட வேண்டும் எனும் புதிய சட்டத்தை முன்மொழியவுளளனர். பாலியல் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இது உதவும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் போதையில் வண்டி ஓட்டியவர்களை அடையாளப்படுத்த இத்தகைய முறை கையாளப்பட்டுவருகிறது.

Ohio wants special car plates for sex offenders
A Republican and a Democrat in the state legislature in Columbus have joined forces to propose the law, which echoes measures in several U.S. states that require convicted drunken drivers to use a yellow, pink or red plate on their cars.

Police said the green plates would allow them to track sex offenders, who are already required to register with the local sheriff's office and are prohibited from living within 1,000 feet (300 metres) of a school.

4 comments:

சேதுக்கரசி said...

இப்படி ஒன்றை எல்லா மாநிலத்திலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்! எத்தனை எத்தனை பெண்கள்/குழந்தைகள் அபகரிக்கப்பட்டு வாகனத்தில் கடத்திச்செல்லப்படுகின்றனர்! அப்படிப்பட்ட சம்பவங்கள் இதனால் குறைய வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

பார்க்கிங் லாட்டில் கார் நிறுத்தும்போது பச்சைப் பலகை கொண்ட கார் பக்கத்தில் நிறுத்தாமலிருக்கவும் இது உதவும் :-)

துளசி கோபால் said...

அந்த வண்டியை எடுத்துக்கிட்டு ஆளுங்க வெளியே வருவாங்கன்னு நினைக்கிறீங்களா? பேசாம
அந்த ஆளுங்க நெத்தியிலே பச்சை குத்தி விட்டுறலாம் "இவர் பாலியல் குற்றவாளி'ன்னு.

ஆதிபகவன் said...

இது இந்தியாவில் நடைமுறைபடுத்தப் பட்டால், யோசியுங்கள்!!

தடா, பொடா, கஞ்சா சட்டம் போன்று
அரசியல் பழிவாங்கலுக்காகவே அதிகம் பயன்படும். உண்மையான நோக்கம் அடிபட்டுப் போய்விடும்.

சிறில் அலெக்ஸ் said...

//பழிவாங்கலுக்காகவே அதிகம் பயன்படும். உண்மையான நோக்கம் அடிபட்டுப் போய்விடும். //

சுட்டில உள்ள செய்திய படிச்சிருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். இது Convicted Felonsக்கு மட்டும்தான். குற்றவாளின்னு தீர்ப்பிடப்பட்டவங்களுக்கு மட்டும்தான்.

-o❢o-

b r e a k i n g   n e w s...