.

Thursday, March 1, 2007

குழந்தைகளுக்கான புதிய மலேரியா மருந்து

குழந்தைகளுக்கான, குறைந்த விலையில் கிடைக்கும் மலேரியா மருந்து பாரிசில் வேளியிடப்பட்டது. ஆப்ரிக்காவில் ஐந்துவயதுக்கு குறைந்த சுமார் 3000 குழந்தைகள் தினமும் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

New malaria drug targets children(BBC)

1 comment:

Boston Bala said...

BBCTamil - மலேரியா நோய் சிகிச்சைக்கு மலிவு விலை மருந்து அறிமுகம்: மலேரியா நோய்க்கு எதிராக புதிய, விலை குறைவான மருந்து ஒன்று பாரிஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக சிறார்கள் மலேரியா நோயினால் பாதிக்கபட்டுள்ளார்கள். அந்த சிறார்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய காலத்தில் மலேரியாவிற்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்ட இரு மருந்துகளின் கூட்டே இந்தப் புதிய மருந்து.

நாளொன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று நாட்களுக்கு இந்த மருந்து கொடுத்தால் போதும் என்கிற வகையில் இந்த மருந்தைக் கொடுப்பது சுலபமாக இருப்பதால், இது நல்ல பலனை அளிக்கும் என இது தொடர்பில் அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நோயாளிகள் சிகிச்சையை சுலபமாக முழு அளவில் முடிக்க இயலும். மேலும் நோயை எதிர்க்கும் தன்மைக்கு தடை ஏற்படுவதையும் தடுக்க இயலும்.

இந்த மருந்துக்கு காப்புரிமை பெறப்படமாட்டாது.

-o❢o-

b r e a k i n g   n e w s...