.

Monday, March 26, 2007

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவு பட்டியலை திரும்ப பெறக் கோரி ஏப். 22 முதல் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை, மார்ச் 26: தமிழக நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு முன்வரைவுப் பட்டியலை திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் போராட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்:

"30 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பில் தமிழகத்தில் இதுவரையிலும் 30 மாவட்டங்களிலும் பரவலாக 7 மக்களவை தனித் தொகுதிகள் இருந்தன. தற்போதைய வரைவுப் பட்டியலில் வட தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மட்டும் தனித் தொகுதிகள் உள்ளடங்குமாறு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள், மேற்கு மாவட்டங்களில் உள்ள அருந்ததியர் இன மக்கள் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாத வகையில் நாடாளுமன்றத் தனித் தொகுதிகள் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தற்போது

  • காஞ்சிபுரம்,
  • நாகப்பட்டினம்,
  • சிதம்பரம்,
  • விழுப்புரம்,
  • கள்ளக்குறிச்சி,
  • கடலூர்,
  • திருவள்ளூர்
ஆகிய தொகுதிகள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது இரு மாவட்டங்களில் தலா இரு தொகுதிகள் இடம்பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனவே, வெளியிடவுள்ள மறு சீரமைப்பு முன் வரைவுப் பட்டியலைத் திரும்பப் பெற வேண்டும். மாவட்ட, ஒன்றிய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உள்பிரிவு சாதிகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன்பின் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே உள்ள
  • தென்காசி,
  • பொள்ளாச்சி,
  • ராசிபுரம்,
  • பெரம்பலூர்
போன்ற தொகுதிகள் தனித் தொகுதிகளாக நீடிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டம் நடத்த தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் அமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது."

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...