.

Monday, March 26, 2007

ஸ்ரீலங்காவில் புலிகள் தாக்குதல் குறித்து இந்திய அரசு கவலை

இன்று கொழும்பு விமானநிலயத்தின் மீது நடந்த வான்புலிகளின் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஒரு போராட்டக் குழு இத்தைகைய வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தளத்திலிருந்து கொழும்புவரை சென்று தாக்குதலை நடத்தி பத்திரமாக மீளவும் முடிந்திருக்கிறது என்றால் தமிழகத்தின் பல பகுதிகளை புலிகள் எளிதாக தாக்க முடியும். இருப்பினும் அவர்களால் தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ உடனடி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


மேலும்..DNA - India

6 comments:

மணியன் said...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் சுடப்பட்டு இறந்த போது இல்லாத கவலை இப்போது எங்கிருந்து வந்தது ? :((

Adirai Media said...

யாருக்கு மணியன் அவர்களே?

மணியன் said...

இந்திய அரசிற்குத்தான். இன்று கவலை அளிப்பதாக அறிக்கை விடும் மைய அரசு அன்று ஸ்ரீலங்கா தூதுவரை அழைத்து கவலை தெரிவித்திருக்க வேண்டுமல்லவா ?

Anonymous said...

நியாயமான கவலைதான். இந்தியா இலங்கை அரசுக்கான இராணுவ உதவியை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

Anonymous said...

இலங்கை அரசு தமிழ் மக்களை கொன்றொழித்த போது ஏன் கவலை தெரிவிக்கவில்லை.
அது ஏனய்யா.. தமிழகத்திற்கு ஆபத்து என்கிறார்களோ தெரியவில்லை. இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்த போது சீனா கவலைப் பட்டதுண்டா..? எங்களிடம் ஆயுதம் இருக்கிறது என்பதற்காக கண்டவன் நிண்டவன் மீதெல்லாம் பரீட்சித்து பார்க்க இது என்ன விளையாட்டா..?

தமிழகம் மீது குண்டு வீசி.. புலிகளுக்கு என்ன பயன்..? ரொம்பத்தான்.. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்.. பேய் கதைதான்.

Anonymous said...

ஆமய்யா.
இந்தியா குடுத்த ராடர்களிலே எந்த
பிரயோசனமும் இல்லைபோல.
இந்தியாவின் இறையாண்மையை,தமிழக்த்தின் இறையாண்மையை பாதுகாக்க இலங்கைக்கு இராணுவ உதவி மேலும்
நீட்டிக்கவேண்டும்.என்ன தமிழகமீனவர்களை சுடுகிறார்களா?
எங்களுக்கு ராஜிவ் காந்தியின்?? உயிர் தான் உயிர் மற்ற தமிழன்களின் உயிர்
எல்லாம் மயிர்.
வெள்ளையனுக்கு பிறகு நாங்க கும்பிடு
போடறது வடக்கத்திகாரர்களுக்கு தானே.

-o❢o-

b r e a k i n g   n e w s...