.

Tuesday, March 13, 2007

மலேசிய கோலாலம்பூர் உலகின் சிறந்த விமான நிலையம்



'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்னேஷனல்'ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.பல்வேறு பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையத்துக்கான விருதுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவ்விருது,ஆண்டுக்கு ஒன்றைரை கோடியிலிருந்து இரண்டரை கோடி வரையிலான எண்ணிக்கை கொண்ட பயணிகளால் பயணம் செய்யப்படும் விமான நிலையத்துக்கான பிரிவில் மலேசியாவுக்கு வழங்கப்பட்டது.

மலேசியாவை அடுத்து அமெரிக்காவின் சான் டியாகோ விமான நிலையம் இரண்டாம் இடத்தையும்,சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன.

Yahoo - Tamil

3 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மலேசிய விமான நிலையம் பலமுறை இந்த பெருமையை அடைந்திருக்கிறது.
நகரைவிட்டு 40 கிலோமிட்டர் தொலைவில் இருக்கிறது. நகரில் இருந்து 10 நிமிடத்துக்கு ரயில் வசதி இரூக்கிறது. ரயில் கட்டணம் 25 மலேசிய வெள்ளிகள்.

சிறந்த விமான நிலையம் என்றும் சொல்லும் தகுதி முற்றிலும் அதற்கு இருக்கிறது என்பதை அங்கு சென்றவன் என்ற முறையில் நேரடியாக பார்த்து அறிந்திருக்கிறேன்

சிவபாலன் said...

பதிவர் கோவி.கண்ணன், மலேசியா சென்ற போது எடுத்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்துகொண்டுள்ளார். அது இங்கே வலை ஏற்றப்பட்டுள்ளது.

அவருக்கு மிக்க நன்றி

சிவபாலன் said...

GK,

அனுப்பவ பகிர்வுக்கு மிக்க நன்றி!

படங்களுக்கும் நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...