.

Tuesday, March 13, 2007

சென்னையில் பரவுகிறது சின்னம்மை

சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை ('சிக்கன்பாக்ஸ்'), தட்டம்மை ('மீஸில்ஸ்') பரவத் தொடங்கியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை - தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.

'ஏசைக்ளோவிர்' என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

அச்சச்சோ..
பாபா ட்ரிப் கேன்சல் பண்ணிடலாமா?
:)

கோவி.கண்ணன் [GK] said...

முன்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பெரியம்மை பரவி இருந்தது.
:)

சிறில் அலெக்ஸ் said...

கோவி.,
இப்ப பெரியப்பாவா?
:)

-o❢o-

b r e a k i n g   n e w s...