.

Friday, March 30, 2007

சற்றுமுன்:கோவையில் ஆடம்பர குடியிருப்புகளுக்கு அமோக வரவேற்பு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து `ஜவுளி நகரம்' கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டினைக் கண்டு வருகின்றன.

கோவையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன தனி இல்லங்களுக்கான தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவிடும் பணத்திற்கு தகுந்த மதிப்பு உள்ளதால் இவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயர்தர குடியிருப்புகளை நிறுவுவதில் கோவை மாநகரம் சென்னை அண்ணா நகருக்கு இணையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது'' என்று பிரசீடியம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி ஹேம்சந்த் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, ஆபரணம், வார்ப்படம், பம்ப் செட் தொழிற்பிரிவுகள், இலகு ரக பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும், வங்கியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நல்ல தேவைப்பாடு உள்ளதாக கோவை ரியல் எஸ்டேட் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

- தினதந்தி, The Economic Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...