.

Friday, March 30, 2007

சற்றுமுன்: நாளை தமிழகம் முழுவதும் பந்த்

நாளை முழு அடைப்பு: பஸ்-ஆட்டோ-லாரிகள் ஓடாது

சென்னை, மார்ச். 30-

உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக் கீடுஅளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.

அதோடு வரும் கல்வி யாண்டில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இட ஒதுக்கீடு ஆதரவு அமைப் புகள், மற்றும் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. தமிழ்நாட்டில் எல்லாக் கட்சிகளும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் எதிர்ப்பை தெரிவிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அவசரக் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு நடந்தது. தமிழ் நாட்டில் நாளை (சனிக் கிழமை) பொது வேலை நிறுத்தம் (முழு அடைப்பு) நடத்தி இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

முழு அடைப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. பால் வினியோகம், மருந்து சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் மொத்தம் 17,500 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் நாளை ஓடாது. நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் நாளை ஓடாது.

நாளை காலை 6 மணிக்குள் விரைவு பஸ்கள் சென்றடையும் வகையில் இன்று மாலை பஸ்கள் முன்கூட்டியே புறப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு முன் பதிவு செய்த பயணிகள் முன் கூட்டியே வந்தால் வேறு பஸ்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் வழக்க மாக 2600 பஸ்கள் இயக்கப் படுகின்றன. அனைத்து பஸ் களும் நாளை ஓடாது. மாலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படும்.

டேங்கர், சரக்கு லாரிகள், எல்.பி.ஜி. லாரிகளும் இயக்கப் படவில்லை என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பி.எஸ்.ஏ.செங்கோடன் கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லாரிகளை தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இயக்க மாட்டோம் என்றார்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் லாரிகள் உள்ளன. அவை அனைத்தும் நாளை ஓடாது. பகல் நேரத்தில் ஓடக்கூடிய ஆம்னி பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற உள்ளது. அவை திட்டமிட்டப்படி நடைபெறும்.

நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள முக் கிய பல்வேறு தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. எனவே பெரிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் நாளை இயங் காது. கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

ரெயில், விமான சேவை களும் நாளை இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்த் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலை யங்கள் மற்றும் பஸ் டெப் போக்கள் முன்பு பாதுகாப் புக்காக போலீசார் நிறுத்தப் படுவார்கள்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 86 ஆயிரம் போலீசார் உள்ளனர். இவர்களில் உத்தர பிரதேச மாநில தேர்தல் பாது காப்புக்காக 6 கம்பெனி போலீசாரும், பீகாருக்கு 6 கம்பெனி போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநில பாதுகாப்புக் காக சென்றுள்ள இந்த 1200 போலீசார் தவிர மீதியுள்ள அனைத்து போலீசாரும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் அனைத்து துணை கமிஷனர்கள் மேற்பார் வையில் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படு வார் கள் என்று போலீஸ் கமிஷ னர் லத்திகாசரண் தெரிவித்தார்.

===========
மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...