.

Friday, March 30, 2007

சற்றுமுன்:பாமகவுக்கு துக்கநாள் - ராமதாஸ்

கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிடாதே', "உயிர் போனாலும் இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுப்போம்', "உயிரை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை காப்போம்', "விடமாட்டோம் விடமாட்டோம் இடஒதுக்கீடு பறிபோக விடமாட்டோம்' போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.

"மாலைச் சுடர்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...