செவ்வாய், 27 மார்ச் 2007 (10:53 ஐளுகூ)
குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களின் எலும்புகள் பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிறு குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று பாராளுமன்றத்தின் நிபுணர் குழு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக 2004-ம் ஆண்டு என்.கே.கங்குலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.குழு தனது அறிக்கையை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் பெப்சி, கோககோலா நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் உள்ளதாகவும் இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.தக்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
தங்கள் நிறுவன குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா ஆகிய குளிர்பான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"வெப் உலகம்"
Friday, March 30, 2007
சற்றுமுன்: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க உத்தரவு!
Posted by சிவபாலன் at 7:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
நாங்க குடிச்சப்போ எல்லாம் ஒண்ணும் தெரியலை!
இந்திய அணி தோத்தவுடன்தான்
பெப்ஸி, கோக்கை விசாரிக்கணும்னு அக்கறை வந்திருக்கு இந்த அரசாங்கத்துக்கு!
இந்த பானங்களில் பூச்சிக் கொல்லி இருக்கு என்று இப்படி எத்தனை நாளுக்கு சொல்லுவாங்க. சலிப்பாக இருக்கிறது.
எப்பதான் தடை விதிப்பாங்க. இன்னும் ஒரு 100 வருடத்திலாவது செய்வாங்களா?
Pope John Paul II likely to get saint hood, because of a 'miracle' he made happen.
http://www.forbes.com/feeds/ap/2007/03/30/ap3567764.html
Can you add this?
சர்வேசன்
செய்திக்கு நன்றி.
தனி செய்தியாக கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.
http://satrumun.blogspot.com/
2007/03/blog-post_31.html
நன்றி
Post a Comment