.

Friday, April 6, 2007

ச: பாக்.கில் இந்து பிரமுகர்கள் கடத்தல்: அமைச்சர்கள் வீடுகளின் முன் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமாபாத், ஏப். 5: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத் தலைவர் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் வீட்டின் முன் இந்துக்கள் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் காணாமல் போகின்றனர்.

சமீபத்தில் இந்து மதத் தலைவர் ஓம் பிரகாஷ் என்பவர் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்டு 18 நாள்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜகோபாத்தில் உள்ள சிந்து மாகாண அதிகாரி நஸிர் கான் கோஸாவின் வீட்டின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமைச்சர் மிர் மன்சூர் கான் வீட்டின் வெளியே அமர்ந்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஓம் பிரகாஷை மீட்க வேண்டி வாசகங்கள் அடங்கிய பேனர்களை எதிர்ப்பாளர்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். குடியுரிமைக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி

2 comments:

சற்றுமுன்... said...

அனானி பின்னூட்டம் நீக்கப் பட்டுள்ளது

சற்றுமுன்... said...

இங்கே வந்து ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டவர் யார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்...

செய்தி ஊடகமாக இந்த தளத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோமே அல்லாமல் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களை அல்ல. அந்த வகையில் ஊடகச்செய்தி ஒன்றை வெளியிட்டதற்காக ஆபாசமாக பின்னூட்டம் இட்டு இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்வது உங்கள் மனப்பிறழ்வையே காட்டுகிறது.

இது இந்தப் பதிவிற்காக தன்னலமின்றி உழைக்கும் அத்தனை நண்பர்களையும் புண்படுத்தும் செயல் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஊடக நன்மைக்காக புதிய தகவல்கள் பின்னூட்டங்கள் வாயிலாகவும் விரைவாக வந்து சேர்வதற்காகவும் மட்டுறுத்தலை நீக்கி இருந்தோம். உங்கள் அநீதியான ஆபாசத்தின் விளைவாக மீண்டும் மட்டுறுத்தலை மேற்கொள்ள வேண்டியுள்ளது

-o❢o-

b r e a k i n g   n e w s...