.

Tuesday, April 3, 2007

ச: Monkey Falls இனி ஆண்களுக்கே



ஆழியாறு குரங்கு அருவியில் இனி ஆண்களை மட்டுமே குளிக்க அனுமதிப்பது பற்றி வனத்துறை பரிசீலிக்கிறது. புலியருவியில் பெண்கள் அனுமதிக்கப்படுவர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து சுமார் 5 கிமீ தொலை வில் உள்ளது குரங்கு அருவி (மங்கி பால்ஸ்). இங்கு சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற் போது கோடை துவங்கி உள்ளதால், வனப்பகுதியில் தீ தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ஸ்ளப்பட உள்ளது.

வன உயிரின காப்பாளர் வரதராஜன் கூறியதாவது:
குரங்கு அருவியில் ஆண்க ளும் பெண்களும் சேர்ந்து குளிப்பதால் சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. புலி அருவியிலும் குளிக்க சுற்று லா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு அந்த இடம் போதுமானதாக உள் ளது. ஆகவே குரங்கு அருவி யில் ஆண்கள் குளிக்கவும், புலி அருவியில் பெண்கள் குளிக்கவும் ஒதுக்கீடு செய்ய லாம் என ஆலோசிக்கிறோம். இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றார்.

- மாலை முரசு

6 comments:

Anonymous said...

Wow. Nice Place.

மங்கை said...

இது என்ன அநியாயம்.. நான் போய் சண்டை போட போறேன்.. நான் இதை வன்ன்ன்ன்ன்ன்மையாக கண்டிக்கிறேன்..

(அப்படியாவது ஊருக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாமுன்னு)

சிவபாலன் said...

//Monkey Falls இனி ஆண்களுக்கே"//

எங்களின் நீண்ட்ட்ட்ட்ட்ட் நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சி!


//(அப்படியாவது ஊருக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாமுன்னு) //

Ha Ha Ha..

இலவசக்கொத்தனார் said...

ஒரு குடும்பத்தோட போன ஒரே இடத்தில் குளிக்க முடியாதா? என்ன அநியாயம் இது? நல்ல வேளை இந்த கூத்துக்கு எல்லாம் முன்னாடி இங்க ஆசை தீர குளிச்சாச்சு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருஷாவருஷம் போறோங்க ..என்ன பிரச்சனை அங்க தெரியலயே..இதெல்லாம் அநிநாயம்.
அக்கிரமம்.

Anonymous said...

No, They should reconsider. Every loves to go with family only.

-o❢o-

b r e a k i n g   n e w s...