.

Tuesday, April 3, 2007

ச: யாருடனும் கூட்டணிக்கு நான் ரெடி: விஜயகாந்த்

தேர்தல் கூட்டணி தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னிடம் பேச வரலாம், நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நாகர்கோவிலில் நேற்று நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடுவோம்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தனித்தே போட்டியிடுவோம். அதேசமயம், கூட்டணிக்காக யாராவது விரும்பினால் அவர்கள் தாராளமாக வந்து பேசலாம். யார் வேண்டுமானாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக என்னுடன் பேசலாம்.

நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானத்துடன் தான் எடுப்பேன் என்றார் விஜயகாந்த்.


"மேலும் செய்திக்கு தட்ஸ் தமிழ் "

9 comments:

நாமக்கல் சிபி said...

//எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தனித்தே போட்டியிடுவோம். அதேசமயம், கூட்டணிக்காக யாராவது விரும்பினால் அவர்கள் தாராளமாக வந்து பேசலாம். யார் வேண்டுமானாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக என்னுடன் பேசலாம்.

நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானத்துடன் தான் எடுப்பேன் என்றார் விஜயகாந்த்//

இப்போதுதான் கொஞ்சம் அரசியல் பக்குவம் அடைந்திருக்கிறார் போல் தெரிகிறது!

இனி நிச்சயம் தேர்ந்த அரசியல்வாதியாகி விடுவார் என்று மக்கள் நம்பலாம்!

Anonymous said...

/நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை./

அப்ப திமுக..

/இனி நிச்சயம் தேர்ந்த அரசியல்வாதியாகி விடுவார் என்று மக்கள் நம்பலாம்!/

வழி மொழிகிறேன்

நாமக்கல் சிபி said...

//அப்ப திமுக..//

முந்திக் கொண்டால் அ.தி.மு.க!

//எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தனித்தே போட்டியிடுவோம். அதேசமயம், கூட்டணிக்காக யாராவது விரும்பினால் அவர்கள் தாராளமாக வந்து பேசலாம். யார் வேண்டுமானாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக என்னுடன் பேசலாம்.//

இதிலிருந்தே தெரியவில்லையா! அவர் எவ்வளவு தேறி விட்டார் என்று!

இப்படியும் இருப்பேன். அப்படியும் இருப்பேன்.

பின் குறிப்பு:

//நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை//

என்னையும் அவர் எதிரியாகப் பார்க்க மாட்டார் என்றே நம்புகிறேன். நானும் அப்படிப் பார்க்கவில்லை!

குசும்பன் said...

தடுமாற ஆரம்பிக்கிறார்...தனித்து நிற்க்கும் வரைதான் அவருக்கு மதிப்பு..காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கூட கூட்டணி வைக்கலாம்...இதை விட்டு வேறு ஏதும் முடிவு எடுப்பாராயின் ...
வைகோ கதைதான் இவருக்கும்

ஜோ/Joe said...

இந்தாளுக்கு அழிவு காலம் ஆரம்பிடிச்சு!

மணிகண்டன் said...

அழியும் பயிர் முளையிலேயே தெரியுது :)

Anonymous said...

/அழியும் பயிர் முளையிலேயே தெரியுது /

:)

Anonymous said...

காங்கிறஸ்காறங்க பக்கம் போகட்டா தேறுவார். உருப்படாத கூட்டம். கப்டன் புரிஞ்சுகிட்டா சரி.

புள்ளிராஜா

Boston Bala said...

மதுரை மேற்கு இடைத்தேர்தல் வரும் பின்னே;
மதுரையழகர் அறிவிப்பு வரும் முன்னே?

-o❢o-

b r e a k i n g   n e w s...