.

Wednesday, April 4, 2007

ச: தமிழக போலீஸ் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக காவல்துறை உயரதிகாரி பிரேம் குமாருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒருமாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1981 ஆம் ஆண்டு, மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் பிரேம் குமார் காவல்துறை துணை ஆய்வாளராக இருந்தபோது, அந்த ஊரில் இருவருக்கிடையிலான தனிப்பட்ட தகறாறு தொடர்பான புகார் ஒன்று அவரிடம் வந்தது. அந்த புகாரில் சம்பந்தப்பட்ட முன்னாள் ராணுவவீரரை பிரேம் குமார் பகிரங்கமாக அடித்து, கைகளை கட்டி வீதியில் அவமானப்படுத்தி அழைத்துச் சென்ற விதம் மனித உரிமை மீறல் என்று சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் பிரேம் குமார் மீது வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், பிரேம் குமாருக்கு ஒருமாதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகபட்ச செல்வாக்குடன் இருந்த பிரேம்குமார், தற்போதைய திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்தவர் பிரேம் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...