.

Wednesday, April 4, 2007

ச: இந்திய சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தல்

லண்டன், ஏப். 4-
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவின் கடல்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று முன் தினம் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் பணியாற்றிய 14 இந்திய மாலுமிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிமதுல்லா என்ற சரக்கு கப்பல் மத்திய தரைக்கடல் நாடுகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஆப்ரிக்க கடல்பகுதி வழியாக இந்தியா வந்து கொண்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். சோமாலியா நாட்டை ஒட்டிய கடல்பகுதியில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்த போது கடல்கொள்ளையர்கள் நிமதுல்லா கப்பலை சிறிய மோட்டார் படகுகளில் வந்து சுற்றி வளைத்தனர். பயங்கர ஆயுதங்களுடன் நிமதுல்லாவில் புகுந்த கொள்ளையர்கள் கேப்டன் மற்றும் கப்பல் சிப்பந்திகளை தாக்கி தனி அறையில் அடைத்தனர். பின்னர் கப்பலை ரகசிய இடத்துக்கு கடத்தி சென்றனர்.

கடந்த 5 வாரத்தில் சோமாலியா கடல்பகுதியில் கடத்தப்படும் இரண்டாவது கப்பல் இது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபை பதிவு பெற்ற ரோசன் என்ற கப்பல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் பணியாற்றிய 6 கென்யன் மற்றும் 6 இலங்கை மாலுமிகளை கடல் கொள்ளையர்கள் இன்னும் விடுவிக்க வில்லை.

சோமாலியாவில் உள்நாட்டு கலவரம் மூண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மொகதிஷ¨விலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

மாலை முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...