கொல்கத்தா, ஏப். 3: உலகக்கோப்பையில் மோசமாக விளையாடிய அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் டோனியின் சொதப்பல் தொடர்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் எதிரணி பந்து வீச்சுகளை துவம்சம் செய்வார் என்று விக்கெட் கீப்பர் டோனியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால்,லீக் சுற்றில் வங்கதேசம், இலங்கைக்கு எதிராக டட் அவுட்டாகி டோனி ஏமாற்றினார். இதனால், டோனி மீது ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கிழக்கு மண்டல அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஜார்கண்ட் அணி சார்பில் டோனி பங்கேற்றார். இதற்காக நேற்று முன்தினம் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
முதல் போட்டியில் ஒரிசா அணியை எதிர்த்து ஜார்கண்ட் விளையாடியது. முதலில் பேட் செய்த ஒரிசா 20 ஓவரில் 121 ரன் எடுத்தது. இதன்பின் பேட் செய்த ஜார்கண்ட் 111 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடி ஜார்கண்ட் வெற்றிக்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி 1 ரன் மட்டுமே எடுத்தார்.
Dinakaran Tamil Daily News Paper
Wednesday, April 4, 2007
டோனி சொதப்பல் தொடர்கிறது
Labels:
கிரிக்கெட்
Posted by
Boston Bala
at
12:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
பாபா, டோனி அடிச்சா தாங்க நியூஸ்..அடிக்கலைன்னா சகஜம்..:)
ஆஹா... அப்படியா மேட்டர் :))
நாய்/மனுசன்/கடி கதையா ;)
இன்னுமா என்னை நம்புறீங்க?
நெட் ப்ராக்டிஸ் செய்ய சொன்னா, இங்கே ஏன் கமெண்ட் போடுறீங்க தோனி?
Post a Comment