.

Wednesday, April 4, 2007

சார்க் தலைவர்களின் மனைவிகள் 90 நிமிடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு ஷாப்பிங்

புதுதில்லி, ஏப். 4: சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பாகிஸ்தான், இலங்கை, பூடான் அரசுத் தலைவர்களின் மனைவிகள் தில்லியில் ஒரே கடையில் 90 நிமிடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கினர்.

பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸின் மனைவி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சய-வின் மனைவி மற்றும் பூடான் பிரதமர் கண்டு வாங்சக்-கின் மனைவி ஆகியோர் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் காட்டேஜ் எம்போரியத்திற்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒன்றாக வந்தனர்.

விற்பனையாளர்கள் அவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமரின் மனைவி ருக்ஷானா அஜீஸ் ரூ.43 ஆயிரத்துக்குப் பொருள்கள் வாங்கினார். மொத்தத்தில் மூவர் குழுவும் 10 சதவீத தள்ளுபடி போக ரூ.50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கி கடைக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

Dinamani

2 comments:

Anonymous said...

ஊரை அடித்து சுருட்டிய பணம் தானே. இருந்தாலும் பணம் கொடுத்ததே
பெரிய புண்ணியம். கை நீட்டி வாங்கி மட்டும் பழக்கப்பட்ட கையாச்சே.

அதுதான் தப்பா எண்ணாத சார்

புள்ளிராஜா

Anonymous said...

ஊரை அடித்து சுருட்டிய பணம் தானே. இருந்தாலும் பணம் கொடுத்ததே
பெரிய புண்ணியம். கை நீட்டி வாங்கி மட்டும் பழக்கப்பட்ட கையாச்சே.

அதுதான் தப்பா எண்ணாத சார்

புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...