.

Thursday, May 17, 2007

ச: உச்சநீதிமன்றம் 27% இடஒதுக்கீடு வழக்கு: பெரிய பெஞ்ச் விசாரணைக்கு

அரசின் இடஒதுக்கீடு கொள்கை குறித்து பல கேள்விகளை ஆய்வுசெய்யவேண்டியிருப்பதால் உச்சநீதிமன்றம் இன்று வழக்கை அதிக நீதிபதிகள் அமரும் பெரிய நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டதிருத்தம் 93இல் நுழைக்கப்பட்ட 15(5) பகுதியை சட்டப்படி செல்லுமா என அந்த பெரிய நீதிமன்ற அமர்வு ஆய்வு செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும்...Deccan Herald - SC refers OBC quota issue to larger bench

1 comment:

Thamizhan said...

இந்தியாவிலே இரண்டு மக்கள் மன்றங்கள் உள்ளன.ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டது.இன்னொன்று அவர்களாகவே வேண்டியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து தங்கள் கர்ப்பகிரஹத்தின் திமிரை நிலைநாட்டிக்கொள்ளும் உச்ச நீதி மன்றம்.
அங்கே தற்போதுள்ள தலைமை நீதிபதி பலரின் எதிர்ப்புகளுக்கு எதிரே நாராயணன் அவர்களின் பிடிவாதத்தால் நீதிபதி ஆனவர்,அவர் குரல் தனிக்குரலாக இருக்குமா,ஒத்து ஊதும் குரலாக இருக்குமா என்று இந்த 27 விழுக்காட்டிலே தெரிந்துவிடும்.

மக்கள் மன்றத்தைப் பல முறை அவமதித்தவர் கடைசியாக மீண்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமதித்து அவரே வக்கீலாக வாதாடியுள்ளது இந்த உயர்சாதியின்து கடைசிப் போராட்டம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மக்கள் மன்றத்தால் ஏக மனதாக சட்ட வல்லுநர்களுடன் அறிவுரைகளுடன் உண்டாக்கியது சட்டமா?இல்லை இந்த சாதி வெறியரின் அபிலாசைகள் சட்டமா? என்பது வெளி வந்துவிடும்.
தமிழகத்தின்69 விழுக்காட்டைக் கவிழ்க்கத் தான் இவரின் கேள்விகள் என்பது தெரிந்து கொள்ள பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லை.

-o❢o-

b r e a k i n g   n e w s...